பக்கம்:நாடு நலம் பெற.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாடு நலம் பெற பன்க வேம்பும் மஞ்சளும் நெல்லிக்கனி மட்டுமன்றி, இயற்கை வழியே இறைவன் பிற உணவுப்பொருள்களையும் காலந்தோறும் படைக் .கின்றார். வேனில் தொடங்குமுன் வேம்பு பூத்துக்குலுங்கு கின்றது. அப்பூவை அப்போதே பயன்படுத்துவதேர்டு உலர்த்தி வைத்து ஆண்டின் பிறபகுதிகளிலும் பயன்படுத் துவர். வேம்பு இலை-யூ-காய்-கனி அனைத்துமே கோடை யிலே வரும் வெப்பு தோய்களைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந் தன. அப்படியே அக்காலத்தில் உண்டாகும் பனைநுங்கும் 'கோடை வெம்மையைத் தணிப்பது பனை அச்சித்திரை வைகாசியிலேதான் பயன் தரும்-ஆம்-மக்கள் நலம் கருதி இப்படியே எலுமிச்சை, அவரை போன்றவையும் காலந் தோறும் விளைந்து மக்கள் நல்வாழ்வுக்காக்வே பயன் படுகின்றன. வேப்பிலையை அம்மை வார்க்கும்போது குடிக்கும் நீரிலும் படுக்கும் பாயலிலும் பிறவற்றிலும் பயன்படுத்தும் முறை இன்றும் உள்ளதே! அந்த நோயினை அம்மை' என்றும் மாரி என்றும் கூறி, வேப் பிலையினை பயன்படுத்துவர் அன்றோ! அந்த மாரி அம்மைக்குக்கோயில் அமைக்கும் போதும் வேப்பமரத் தின் கீழன்றோ அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். விேம்பின் இலை உடுத்து-கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால்' என்று துர்க்கை பாராட்டப்படுகிறா ள்ன்றோ. வீடுகளின் அருகே -சுற்றி வேம்பு இருப்பின் 'நோயனுகாது என்பது உண்மை. நான் என் வீட்டின் பக்க்ங்களில் வேம்பினை வளர்த்தே வாழ்ந்து வருகின் றேன். பள்ளி, கல்லூரிகளிலும் வேம்பு நிறைய உண்டு. நெல்லி,வேம்புபோன்று மற்றொரு விளைபொருள் மஞ்சளாகும் மஞ்சளும் இஞ்சியும் விளையும்.நிலங் களைப் பற்றி இளங்கோவடிகள் மருதநிலத்தை-காவிரி எல்லையினை விளக்கும்போது நன்கு காட்டுவர். இன்றும் தமிழ் நாட்டில் மஞ்சள் விளைகின்றது. பொங்கல் மஞ்சள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/26&oldid=782515" இலிருந்து மீள்விக்கப்பட்டது