பக்கம்:நாடு நலம் பெற.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 25 செடி இன்றி நடைபெறாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்ற பொருள்களுக்கும் மஞ்சள் பவவகையில் உதவுகின் றது. மஞ்சளைக்கறி மஞ்சள் என்றும் கப்புமஞ்சள் என்றும் இருவகையாகக் காண்பர். 'கறி மஞ்சள்’ பொடி ஆக்கப் பெற்று உணவுடன் கலந்து உண்ணப் பயன்படுகின்றது. உடலுக்குள் உண்டாகும் பூச்சிகளை அழித்து, உடலுக்கு நேரும் பல வியாதிகளை அது நீக்குகின்றது. அப்படியே பெண்கள் கப்புமஞ்சளைப் பூசிக்கொள்வதால் உடல் மாசு நீங்கி, முகமும் அகமும் நலம் பெ ம் அமைத்து. மலர்ந்து சிறக்க வாழ்கின்றனர். நம் நாட்டில் வாயிற்படி களுக்கும் மஞ்சள் பூசும் மரபு உண்டு. தமிழர் கலை நலம் கண்டவர்கள். வாயிற்படிகளை அழகுறப் பல்வேறு கலை நயங்கள் பொருந்த அமைப்பார்கள். இக்காலத்தைப் போன்று வெறும் கட்டைகளாக அக்காலத்து வாயிற் படிகள் அமையவில்லை. அவை கலைத்துண்களாகவே அமைந்தன. அக்கலை நயத்தில் சிறுமுழைக்ள் உள்ளீடுகள் பல இருக்கும். அவற்றுள் பல பூச்சிகள் தங்கிக் குடியிருக் கவும் வாய்ப்பு உண்டு. அவற்றைக் கையால் களைய முடியாது.இந்த மஞ்சள் பூச்சினால் அவை அழிந்து கலை நலம், சிறக்கும். வாயிற்படி அழகாகவும் அமையும். இவ்வாறு மக்கள் அகவாழ்விற்கும் புறவாழ்விற்கும் மருந் 'தாய்- வாழ்வின் ஒளி விளக்கமாய் அமைவதோடு, அவர் தம் வாழ்வின் அணிகலமாக-மங்களகரமாக-தாலிக்கயி றாக அமைகின்றது, அந்த மஞ்சள் அணிந்த கயிறு உடலில் இருந்தால் உடலுக்கு வரும் பலநோய்கள் அணுகா. இன்று அந்த நிலை நகர மக்களைப் பொறுத்த வரை மாறி வருகின்றது. அதனால் மருந்தகங்கள் வளர் கின்றன. இவ்வாறு இயற்கையோடு பொருந்தியஇயற்கை தந்த காய், கனி கிழங்குகண்ளக் கொண்டு மனிதன் வாழ்வானால், தேரையர் கூறியபடி தமனார்க்கு அங்கே இடமில்லை என அடித்துக் கூறலாம். நா-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/27&oldid=782517" இலிருந்து மீள்விக்கப்பட்டது