பக்கம்:நாடு நலம் பெற.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ~. நாடு நலம் பெற தெய்வ இருக்கைகள் சிலம்பிலும் பிற காப்பியங்களிலும் தழையும் பூவும் இலையும் செடியும் மரமும் பிற இயற்கை நிலைகளும் தெய்வம் தங்கும் இடங்களாகவும் அத்தெய்வங்கள் அணியும் மாலை, மலர்களாகவும் குறிக்கப்பெறுகின்றன. அத்தெய்வங்களை வணங்குபவர்கள், அத்தழை, மலர் முதலியவற்றின் காற்றால் ஈர்க்கப்பெற்று உடல் நோயும் உள நோயும்-ஏன்?- உயிர் நோயும் நீக்கப்பெறுவர் என அறிதல் வேண்டும் வேட்டுவ வரியில் துர்க்கை இருந்த நிலையினையும் சூழலையும் பலவாறு காட்டுவர் இளங்கோவடிகள். “நாகநாறு நரந்தை நிரந்தன ஆவும் ஆரமும் ஓங்கின எங்கனும் சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே’ . -என்று அவள் திருக்கோயிலில் சுரபுன்னை, நரந்தை, சந்தனம், ஆச்சா அழிஞ்ச்ல் போன்ற மரங்கள் நிரைந்திருந்தன என்கிறார். இவற்றின் வேரும் பட்டையும் பூவும் பிறவும் நோய் தீர்க்க வல்லன. மேலும், அங்கே இருந்த நல்ல சூழலை, செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் கொம்பர் நல்இல வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின் புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே. மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் குரவங் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செயும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/28&oldid=782519" இலிருந்து மீள்விக்கப்பட்டது