பக்கம்:நாடு நலம் பெற.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 27 .* என அவர் காட்டுவர். தெய்வத் திருக்கோயில்களெல்லாம் @೧ುಗ್ಗಲು இயற்கையோடு இயைய, அங்கே சென்று வழிபடும் மக்கள் தம் நோய் நீங்கி நலமுற்று வளம்பெறு வர் என்று கூறாமல் கூறுகின்றனர். பிற்காலப் பெருங்கோயில்களெல்லாம் இந்த நல்ல மருந்தாகும் மரங்கள் அடியில் இருந்த இறைவனுக் கெனவே எழுப்பப்பெற்றன அம்மரங்கள், மருந்தாபித் றப்பா மரத்தற்றால்' என்று வள்ளுவர் உலகறிந்த உண்மை யினை உவமையால் கூறியபடி, தம்மை-தம்கீழ்த் தங்கும் இறைவனை வணங்குவார்க்கு, வாழ்வும் வளமும் அளித்துச் சிறப்பித்தன. ,கோயில்களில் சிதம்பரம் தில்லை வனமாகவும், அறுபத்து நான்கு திருவிளையாடல் களுக்கு இடமாகிய மதுரை கடம்பவனமாகவும் இருந்த னவே. திருவொற்றியூரில் மூவாத திருமகிழும்', மயிலை யில் புன்னையும்,காஞ்சியில் மாவும், குற்றாலத்தில் குறும் பலாவும் இன்றும் தலவிருட்சங்களாக உள்ளமை யாவரும் அறிந்ததே. இவ்வாறே தமிழ்நாட்டுக் கோயில்களெல்லாம் மரநிழலில் அமைந்திருக்க, அவற்றையே தேவார முதலி களும் மணிவாசகர் போன்றோரும் பாடிப்போற்றின்ர். பின்னர் சோழர்காலத்தே-பல்லவர் காலத்தே- அவற் றைச் சுற்றிப் பெருங்கோயில்கள் எழுந்தன- எனினும், -தலவிருட்சங்களை அவர்கள் போற்றி இன்றளவும் பாதுகாக்கும் வகையிலேயே அமைத்துள்ளனர். மாணிக்க வாசகருக்கு இறைவன்-எல்லா இடங்களையும் விட்டுக் குருந்த மரத்தின் கீழ்தான் அருள் செய்தான். நால்வருக்கு அறமுரைத்த ஆண்டவன் அதைக் கல்லால மரத்தின் கீழே தான் செய்தான். புத்தருக்கு ஞானோதயம் உண்டானது அரசமரத்தின் அடியில்தான்-அவர் நிர்வாணமாகி-பரத் தின் பெருந்தன்மை எய்தியதும் அதே மரத்தின் கீழ்தான் . அத்தகைய அரசினையும் வேம்பினையும் இணைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/29&oldid=782523" இலிருந்து மீள்விக்கப்பட்டது