பக்கம்:நாடு நலம் பெற.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 SSAS SSAS நாடு நலம் பெற வழிபட்டுப் பயனடைவர் பல்லாயிரவர் உளரன்றோ? 'Guuirô caduciafià வழிபாட்டுத் தலங்கள் மட்டுமன்றி போர்க்களங் களிலும்பூக்களையே சூடினார்கள் என்பதைத் தொல்காப் பியமும்பின் வந்த இலக்கண இலக்கியங்களும் நமக்கு நன்கு உணர்த்துகின்றன. வெட்சியும் கரந்தையும்,தும்பை யும் காஞ்சியும், நொச்சியும் உழிஞையும், வாகையும் சூடி அக்காலத்தவர் போர் விளைத்தும் வென்றும் வாழ்ந்த வாழ்வினைத் தொல்காப்பியப் புறத்திணை இயல், புறப் பொருள் வெண்பாமாலை, புறநானூறு போன்ற இலக்கண இலக்கியங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. வன்றோ! - நெடுநல் வாடை' எனப் பத்துப்பாட்டுள் வரும் நக்கீரர்தம் பாடல் அகப்பாடலா அன்றிப் புறப்பாடலா என்ற ஐயத்தை எழுப்புவதே வேம்பு என்ற தழைதான். வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம், முன்னோர் முன்றக்ாட்ட' (176-177) என்ற அடிகளில் வேம்பு குறிப் பிடப் பெறுகின்றது. போர்மேற் சென்ற தலைவர் (பாண்டியர்) குறித்த காலத்தில் வராத காரணத்தால் த்லைவிக்கு- பாண்டிமாதேவிக்கு -வருத்தம் உண்டாக, இன்னே வருவர் தலைவர்' என்று தேற்றும் முகத்தால் இப்பாடல் அமைகின்றது. இதில் வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு போர்க்களத்தே- காவலர் இரவிடைச் சுற்றிவரும் நிலையினைச் சுட்டி, அத்தகைய போர்க்களத்தில் வெற்றி கண்ட தலைவன் (பாண்டியன்) இன்னே திரும்பி வருவான் என நக்கீரர் அழகாக அப்பா ட்லைப் பாடி வாடையை நல்வாடை யாக்குகிறார். இதில் வேம்புதலையாத்த’ என்பதால் இந்தத் தல்ைவன் பாண்டியனே ஆவ்ான் என்றும், தலைவர் பெயர் கூறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/30&oldid=782526" இலிருந்து மீள்விக்கப்பட்டது