பக்கம்:நாடு நலம் பெற.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வள்மே நாட்டு வளம் 29 படாதனவெல்லாம் அகப்பாடல்களால் ஆனமையின், இங்கே பாண்டியனைச் சுட்டியபடியால் இது புறப் பாடலே எனச் சிலர் முடிவு கட்டுவர். ஆயினும் வேம்பு மருந்தாக, வேம்பின் தழை, மருந் தமை உடன் சுற்றாக- ஆடையாக், அதன்காற்று ந்ோய் நீக்குவதாக, போர்க்களத்தில் உண்டாகும் புண்களையெல் லாம் நீக்குவதாக அது அமைகின்றது என்றும் அதன்ால் காவலர் தம் வேலிலும் வாளிலும் அம்பிலும் கொம்பிலும் இந்த வேம்பின் தழையை எப்போதும் சுற்றி வைத்துத் கொண்டே இரவு பகலாகப் போர்க்களத்தைச் சுற்றி வருவார் என்றும், எனவே, இது பொது நிகழ்ச்சியாக எல்லாப்போர்க்கள்ங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சியாத் லின், பாண்டியன் மாலையாகிய வேம்பினைக் குறிக்காது என்றும், எனவே இது அகப்பாடலே எனவும் அறுதியிடு வர் சிலர். இதை நோக்கின் வேம்பு போர்க்களப் புண் களுக்குத் தூய மருந்தாய் அமைந்த நிலை நன்கு தெளிவுறும். பாண்டியன் மட்டுமன்றி வேந்தர் ஒவ்வொருவருமே தத்தமக்குத் தனித்தனியாகப் பூவும் மரமும் கொள்வர். வேம்பு பாண்டியனுக்கும், ஆத்தி சோழனுக்கும், கடம்பு சேரனுக்கும் அமைந்ததாக எல்லா இலக்கியங்களும் நம்க்கு, உணர்த்துகின்றனவே. எனவே, மலர்கள் வெறும் மணத் துக்காக அன்றி மருந்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும். வீரத்துக்காகவும் உள்ளன என அறிதல் வேண்டும். அப்ப்டியே மரங்களும். அதனாலேயே பழங்கால அரசர் கள் காவல் மரங்களைத் தத்தமக்கு உடைமையாகக் கொண்டனர். மாற்றான் காவல் மரத்தை வெட்டின்ாலே வெற்றி பெற்றதாகக் காட்டும் வரலாறுகள் சங்க இலக் கியத்தில் உள்ளனவே. எனவே மருந்தாகித்தப்பா மரமும் செடியும் கொடியும் பூவும் கிழங்கும் காயும் கனியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/31&oldid=782527" இலிருந்து மீள்விக்கப்பட்டது