பக்கம்:நாடு நலம் பெற.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாடு நலம் பெற மனிதனை - மனிதலாக - நோயற்றவனாக வா ழ வைத்தன என்பது தேற்றம். . வீட்டிலும் வாழ்விலும் இவ்வாறு வழிபாடு செய்யும் தெய்வநிலையங்களிலும் போர்க்களங்களிலும் மருந்தென் அமைந்து மரங்களும் தழைகளும் கிளைகளும்கொடிகளும் இருப்பதோடு,மக்கள் தங்கள் வீட்டிலும் வாழ்விலும் கூட நோய்த்தடுக்கும் நிலையில் இவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். நாள் தோறும் இன்று நாட்டில் கொள்ளப்படும் தம்பலம் என் னும் வெற்றிலைப்பாக்கு அன்றே இருந்ததென்பதனைக் கலித்தொகை, தைய்ால் தம்பலம் தின்றியோ (61-31) எனக் காட்டுகின்றது. புகையிலை இன்றி, வெற்றிலைப் பாக்கு உணவுக்குப்பின் கொள்ளுதல் உடல் நலத்துக்கு ஏற்ற ஒன்றென இன்றைய மருத்துவரும் கொள்ளுகின்றன ரன்றோ! மண் நாட்களிலும் பிற சிறப்புக்களிலும் விருந் துண்ட்பின் அந்த மீதுாண் நன்கு கழிய இது பயன்படு மல்லவா! தலைக்கு எண்ணெய் பூசுதலும் மலர் அணிதலும் அழகுக்கு மட்டுமன்று. இன்றைய உலகில் எத்தனையோ விளம்பரங்கள் வர, அவற்றால் மயக்குண்டு கண்டதைப் பூசி-வெளுப்பைக் கருப்பாக்க நினைத்துப் பல பூசி-தம் நலத்தைக்கெடுத்துக்கொள்ளும் அவலநிலை அக்காலத்து இல்லை. மகளிரும் மைந்தரும், இயற்கையில் வடித் த்ெடுத்த எண்ணெய், பூ, தழை இவற்றையே பூசியும் புனைந்தும் அழகுபடுத்தியும் தம் நலம் காத்து வந்தனர். காதில் தளிர் அணியும் சிறப்பினையும் பிறவற் றையும் பரிபாடல் "சாய் குழை பிண்டித் தளிர் காதில் தையினாள்: பாய் குழை நீலம் பகலாகத் தையினாள் குவளைக் குழைக்காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் (11.95-98)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/32&oldid=782529" இலிருந்து மீள்விக்கப்பட்டது