பக்கம்:நாடு நலம் பெற.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 31 எனக்காட்டுகின்றது. கோவலர் பகன்றைக் கண்ணியைத் தலைமாலையாக அணிவதை ஐங்குறுநூறு. பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் யாண ரூர!. நின் மனையோள் யாரையும் புலக்கு மெம்மைமற் றெவனோ' எனக் கர்ட்டுகிறது. (87.13) திருமுருகாற்றுப்படை, 'சுரும்பு உணத்தொடுத்த பெருந் தண் மாந்தழை திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ' (203-204) என மகளிர் இடையில் தழை அணிவதை நமக்குக் காட்டு கிறது. தலைக்கு எண்ணெய், சாந்து முதலியவை பூசுவது பற்றியும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. "வெண்ணெய் நீவிய, சுரிவளர் நறுங்காழ்த் - தண்ணறுந் தகரம் கமழ மண்ணி' (குறி-101-10) என்று பத்துப்பாட்டில் குறிஞ்சியும், 'தகரம் நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர்' (பதிற்று89-16-17) எனப் பதிற்றுப்பத்தும் நமக்குக் காட்டுகின்றன. கண்ட் கண்ட உடையைக் கண்ட காலத்து கண்டபடி அணியும் இக்கால மகளிர் உணரும் வகையில் காலத்துக்கு ஏற்ற உடை அணிவதையும் பட்டினப்பாலை நமக்கு உணர்த்து கின்றது. தமிழ் நாட்டு வெம்மைக்கு ஏற்ற கைத்தறி ஆடைகளை, உடலில் காற்றுப் புகுந்து நலம் பயக்கும் வகையிலும் அதே வேளையில் மறைக்க வேண்டியவற்றை மறைக்கும் வகையிலும் நம் நாட்டு மகளிர் அணிதலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/33&oldid=782531" இலிருந்து மீள்விக்கப்பட்டது