பக்கம்:நாடு நலம் பெற.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - நாடு நலம் பெற நோயற்றவாழ்வுக்கு ஏற்றதாகும். எந்தெந்தப் பொரு ளையோ கொண்டு இடையிடை சிறு புரைகள் இல்லாத தகடென அமைந்தவற்றை உடலில் இறுக அமையும் வகையிலும் அதேவேளையில் அக உறுப்புகளை வெளிக் காட்டும் விகையிலும் இன்று உடையணியும் பலருக்கு இந் நோயற்ற வாழ்வு இல்லை. மருந்து அவர்கள் முதல் உணவாக அமையும். தமிழ்நாட்டில் குளிர்காலத்துக்கு ஏற்றகம்பளி அல்லது பட்டு உடையாக அமைய, வெய் யிற் காலத்து நூலால் ஆகிய கைத்தறி ஆடைகளே ஏற்பு டைத்து. கோடைக்காலத்தில் மகளிர் பட்டு நீக்கித் துகில் உடுத்து (பட்டின-106) வாழ்ந்தனர் என உருத்திரங் கண்ணனார் தம் பட்டினப்பாலையில் காட்டுவர். இவ்வாறு அணிவதிலும் உடை உடுப்பதிலும் கூடப்பழங் கால மக்கள் நோய் அணுகா வகையில் வருமுன் காப்போ ராய், உண்ட உணவு செரித்தபின் உண்பவராய் வாழ்ந்து நோயிலராக வாழ்ந்தனர். நான் மேலே காட்டியபடி விழா அறைவோன் இந்த உண்மையைத்தான் பசியும் பிணியும் பகையும் நீங்கி எனக்கூறி விழா நாட்களில் முரசறைகின்றான். அவ்வாறு உண்ணும் உணவு பற்றியும் அது அளிக்கும் விதம் பற்றியும் பத்துப்பாட்டில் பாணாற் றுப் படைகள் பலவகையில் விளக்குகின்றன. அவற்றுள். ஒன்றைக்கண்டு அமையலாம். இன்று அரிசி உணவு கொள்ளுகின்ற நாம் நன்றாகத் தீட்டிய அரிசியினையே உண்கின்றோம். உமிநீங்கித் தவிடு. போகாத-முளை அழியாத அரிசியை உண்பதே நலத் துக்கு ஏற்றதென நல்லவர்,- மருத்துவர் கூறுவர். கைக் குத்தல் அரிசியே சிறந்தது எனவும் அதையே உண்ண வேண்டும் எனவும் அண்ணல் காந்தி அடிகளாரும் பிறரும் கூறி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்கூடக் கைக்குத்தல் அரிசிக்குச் சிறப்பு இருந்தது. தமிழ்நாட்டின் தென்பகுதி. யில் சில உணவுச்சாலைகளில் கைக்குத்தல் அரிசிச் சாப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/34&oldid=782533" இலிருந்து மீள்விக்கப்பட்டது