பக்கம்:நாடு நலம் பெற.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 33. பாடு'என்ற விளம்பரப்பலகை இட்டிருந்ததை நான் கண்டி ருக்கிறேன். ஆனால் காந்தியின் கொள்கைகள் எல்லா வற்றையும் காற்றில் பறக்க விட்டது போன்று இந்தக் கொள்கையினையும் இன்று நாம் கைவிட்டோம். ஆம்! இவற்றையெல்லாம். விட்டு விட்டு. நோய்வாய்ப்பட்டு, 'எனக்கு மாதம் ஆறாயிரம் ஐயாயிரம் வயித்தியச் செல் வுக்கு ஆகின்றது' எனப் பெருமையாகப் பேசிக்கொள்ளும், காலத்தில், நாம் வாழ்கின்றோம். தடுக்கி விழுந்தால் தண்டளிர் கீர்ைகளில் மேல் விழும் நிலைமாறி தடுக்கி, விழுந்தால் மருந்தக வாசல் எனும்படி தெருவுக்குத்தெரு தனியார் மருந்தகங்கள் பல்கிப் பெருகும் நாள் இது. எனினும் நான் முதலிலே கூறியபடி மருந்தகம் பல உள் ளன என்று கூறுவது நாடாகாது; சுடுகாடாக அமையும். 'உள்ள மருந்தகத்துக்கு ஒரு நோயாளிகூட வரவில்லையே! எனக் காணும் நாடே நாடாகும். இங்கு அருஞ்சுரத்தின் வெம்மை தணியப் பலாக்காய் தின்றதை நமக்கு ஐங்குறு நூறு நிலைநாட்டுவதைக் காணலாம். "அத்தப் பலவின் வெயிறின் சிறுகாய், அருஞ்சுரஞ் செல்வோர் அருந்தினர் (351) என்கிறது, நான் மேலே கூறிய முளை நீங்கப் பெறாத அரிசிச் சோற் றிண்ை அளித்த பெருமையினை, . - "முகில் தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பரல்வறைக் கருனை, காடியின் மீதப்ப அயின்ற காலை, பயின்று இனிது இருந்து, (பொரு-112-116) எனப் பொருர்ை ஆற்றுப்படை நமக்கு நன்கு எடுத்துக்காட்டு கின்றது. முல்லை மொட்டுப் போன்ற வரியற்ற இ.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/35&oldid=782535" இலிருந்து மீள்விக்கப்பட்டது