பக்கம்:நாடு நலம் பெற.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாடு நலம் பெற முரியாத அரிசி என நச்சினார்க்கினியர் இதற்கு உரை எழுதுவர். இதில் புழுக்கல், என்பதனைப் புழுங்கல் அரிசி, எனக் கொள்வர். உடல் நலத்துக்குப் புழுங்கல் அரிசிச் சோறே ஏற்றது என்பது பழங்காலத்தவர் கொள்கை. புழுங்கல் அரிசிச்சோற்றில் இரவில் நீர் ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் காலையில் நீராகாரம் எனவே அதைக் கிராம மக்கள் உண்டதை நான் இளமைக் காலத்தில் கண்டிருக்கிறேன். அவர்கள் நல்ல உடற்கட்டு உடையவர் களாய், உலையா உழைப்பும் ஊக்கமும் உடையவர்களாய் மருந்து என்பது இன்னதென அறியாதவர்களாய் வாழ்ந்து வந்த்னர் என்பதையும் கண்டிருக்கிறேன். நான் மேலே காட்டியபடி சில உணவுச் சாலைகளில் புழுங்கல் அரிசி உணவு' என்றும் 'மண்பானைச் சமையல்' என்றும் விளம் பரப் பலகைகள் தொங்குவதையும் கண்டிருக்கிறேன். இன்று அவையெல்லாம் கனவாக ஆயிரக்கணக்கான மருத்துவ நிலையங்கள் வளர்வதையும் அவற்றில் கூட்டம் பெருகுவதையும் காண்கின்றேன். காலத்தேவன் கணக் கீட்டுக் கோலம் போலும் இது! மருந்து கொடுக்கும் வகை இனி, சங்க இலக்கியம் மருந்து கொடுக்கும் வகையி னையும் நமக்குக் காட்டுகிறது. . நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (8) என்றும் "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று) . அப்பால் நாற்கூற்றே மருந்து (10) என்றும் வள்ளுவர் நோய் வாரா வழியினையெல்லாம் முன்னே கூறி, ஒரு வேளை இன்று நாம் வாழ்வது போல அவர்சொல்லை ஏட்டிலும், உந்து வண்டியிலும், அலுவலகத்திலும் எழுதி வைத்து விட்டு, பார் பார்' என்று காட்டி, தம் வாழ்வில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/36&oldid=782537" இலிருந்து மீள்விக்கப்பட்டது