பக்கம்:நாடு நலம் பெற.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 35 மறப்பார் உளர் எனக்கருதி கடைசி மூன்று குறட்பாக் களில் அவ்வாறு தடுக்க வகையறியாத் தன்மையாளருக்கு. மருந்து கொடுக்கும் வகையினையும் அதனைத் உண்னும் வகையினையும் அதனை தேர்ந்து தெளியும் வகையினை யும் கூறுவது போன்று எடுத்துக் காட்டுகின்றார்! சங்க காலத்தில் நோய் நீக்கம் பெற்ற நல்வாழ்வுக்கு இடையில் ஒரு வேளை நோய் பெறின் அதை நீக்க மருத்துவன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பல பாடல்கள் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே கண்டு அமைவோம். தலைவனோடு களவுப்புணர்ச்சியில் தன்னை மறந்து தலைவனோடு இன்புற்ற தலைவி, பின் பிரிந்தவ்ன் வரவில்லை எனக் கவல்கின்றாள். அவ்வருத்தத்தால் உடல் வாட, மற்றார் மறையை அறிந்து கொள்ளும் நிலை உண்டாகுமோ என அஞ்சுகிறாள் தோழி; அவளைப் பல வழியில் தேற்றியிருப்பாள். எனினும் அவள் ஆற்றாமை மீதுாறுகின்றது. அவள் நோயறிந்து, காதல் பெருக்கறிந்து தலைவன் வந்து விட்டான். அப்போது அவனைப்புகழ் கின்றாள் தோழி. நோய்பெற்றவன், அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து உடம்பைக் கெடுத்து விடாது, மருந்து ஆய்ந்து கொடுத்த மருத்துவன் போல்-உரிய வேளையில் வந்து நிற்கின்றான் என உணர்த்துகின்றாள். அவனை மருத்துவன் என்று கூறவில்லை. அறவோன்' என்கின்றாள். ஆம்! அவள் இயற்கைப் புணர்ச்சி முடிந்த உடனேயே அவனைப் பிரியாதிருக்க நினைக்கின்றாள். பின் இடந் தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என முறை முறையாக நிகழினும் அவனோடு பிரியாது உடன் உறை வையே அவள் விரும்புகிறாள் ' என்றும், மருத்துவன் வேட்டது கொடாது, காலம் பார்த்து உரிய வேளையில் மருந்து தருவது போல, வந்து கலந்து பின் மணந்து கொள்ளும் நிலையினையும் பாடுகிறாள். ஆம்! புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/37&oldid=782539" இலிருந்து மீள்விக்கப்பட்டது