பக்கம்:நாடு நலம் பெற.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 37 உயிரும் உடலும் நலம் பெறவும் நெடிது இணைந்து நின்று நல்வாழ்வு பெற்று வாழவும் இவை வழிகாட்டி களாக அமைந்தன. இன்று இந்த நூல்களைப் படிப்பார்படித்தவழி ஒழுகுவார் அருகி விட்டனர். அதனாலேயே நாட்டில் குழப்பங்களும் கொடுமைகளும் அதிகமாகி விட்டன. அப்படியே இம்மருந்துகளை மறந்தமையினா லேயே மருந்தகங்கள் பல்கிப்பெருகினும் இடமில்லா வகை யில் நோயாளிகள் திண்டாடுகின்றனர். இக்கொடுமைகள் நீங்க வேண்டுமானால் இந்நூல்கள் வாழ்விடை வர வேண்டும். இம்மருந்துகளாகிய இயற்கைப் பொருள்கள் உணவிடை புக வேண்டும். இடை வந்த-நம் நாட்டுப் பொருள் அல்லாத மிளகாய் இங்கே ஆட்சி செலுத்து கிறது. தமிழ் நாட்டு நிலைய்ே அதுதான் போலும். தமிழ் நாட்டுக் கோயில்களில் தமிழ் இல்லை- பள்ளி கல்லூரி களில் தமிழில் பாடப்பயிற்சியில்லை. உடுக்கும் உடையில் தமிழ் மரபு இல்லை. தமிழ் மரபு வேண்டும் என வற்புறுத் தினால் தொல்லை.மஞ்சள் கயிறு இல்லா நிலையில் தோல் வியாதிப் பெருக்கமும், மண் பாண்டச்சமையல் இல்லா மையால் ஊன், உறக்கமில்லா நோய்த் தொல்லைகளும். இவ்வாறு தமிழன் வாழ்விலே எல்லாம் பிறர்தம் பழக்க வழக்கங்களாக அமைகின்றன. உணவு, உடை, பிற அனைத்திலும் மிகுந்து விட்ட நிலை மாறினாலன்றி தமிழனுக்கு,உய்வு இல்லை. இயற்கை வள மூலிகை பற்றியே முதலில் நாம் செயல்பட வேண்டும். - இருண்ட காலத்தும் இடைக் காலத்தும் சங்க காலத்தை அடுத்த இருண்ட காலத்தும் சமய மறுமலர்ச்சிக் காலத்தும் பிற்காலச் சோழர் காலத்தும் மரம், செடி, கொடிகளும் மூலிகை வகைகளும் நன்கு பயன் படுத்தப் பெற்றுள்ளன. ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய திருத்தலங்களெல்லாம் மருந்தாகித் தப்பா மரங் களின் கீழ் இருந்து, பிற்காலச் சோழர் காலத்தே பெருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/39&oldid=782543" இலிருந்து மீள்விக்கப்பட்டது