பக்கம்:நாடு நலம் பெற.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாடு நலம் பெற கோயில்களாக மாறின என்பதை முன்னரே காட்டியுள் ளேன். இறைவனையே மருந்தாகவும் மருந்தகப் பலனே அவனாகவும் அடியார்கள் கண்டனர். தொண்டை நாட்டுத் திருக்கச்சூரில் இறைவன் விருந்திட்டதோடன்றி, சுந்தரருக்கு மருந்திட்டும் உதவினான் என்பர். மருந்திட் டிசர் என்ற இறைவன் கோயிலும் உள்ளதாகக் கூறுவர். திருக்கச்சூர் ஆலக்கோயில் பெருங்கோயிலாகக் கீழே அமைந்திருக்க, மருந்தாக அமைந்திருந்த மருந்திட்டீசர் கோயில் பின் சிறுகுன்றின்மேல் உள்ளதாகும். அப்படியே சோழநாட்டு வைத்தீஸ்வரன் கோயிலும் மருந்தாகவும் மந்திரமாகவும் அமைகின்றது. புள்ளிருக்கும் வேளுர் என்று போற்றப்படும் அந்தலத் தெய்வம் வைத்திய நாதன்' என்றே பெயர் பெறுவர். புரிந்தபுகழ் புள்ளிருக்கு வேளுர் வைத்தியனார் பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதரோ அம்மானை பரிந்துவின்ை தீர்க்கவல்ல பண்டிதரே. ஆமாயின் மருந்துவிலை கைக்கூறி வாங்காரோ அம்மானை வாயிலே மண்போட்டு வாங்குவர்காண் அம்மானை' என்ற அம்மானைப்பாடல் அவர் வினைதீரத் தக்க மருந் திட்டு கூலி பெறும் நிலையினைக் காட்டுகின்றது. வாயிலே மண்போட்டு வாங்குவர் என்பதற்குப் பலர் பலவகையில் பொருள் கொள்வர். ஆயினும் அவ்வூர்மண் மருந்தாக அமைகின்றமையின் அதையே மருந்தாகப்போட்டு வாழ் வார் எனக் கொள்ளல் பொருந்தும். இன்றும் அத்தலத்துச் செல்பவர் அவ்வூர் மண்ணைப் பொன்னெனப் பொதிந்து தத்தம், ஊர்களுக்கு எடுத்துச்சென்று நோய்வரின் உண்டு நலம் பெறும் நிலையினைப் பலரும் அறிவர். திரும் இருமன்னும் அப்படியே திருநீறும், திருமண்ணாகிய வைணவச் சின்னப் பொருளும் மருந்தாக அமைகின்றன. சமணனாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/40&oldid=782547" இலிருந்து மீள்விக்கப்பட்டது