பக்கம்:நாடு நலம் பெற.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 39 இருந்த பாண்டியனைச் சைவனாக்கியதோடு, நீங்காத அவன் கூனினையும் நீறு கொண்டே சம்பந்தர் நீக்கினார் எனப் பெரியபுராணம் காட்டுகிறது. மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே' என்ற சம்பந்தர் தம் திருநீற்றுப்பதிகமே இதன் வழி தோன்றியதல்லவா! திருநீறு என்றால் ஏதேதோ கட்டியாக இன்று கடை களில் விற்பது என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மூலிகைகளைப் பதம் பண்ணுவது போன்றே, நீறும் பதம் பண்ணப்பெறுவதேயாகும். புல்தின்னும் கன்று ஈன்ற பசுவின் சாணத்தை உருட்டி வைத்து அதைச் சூரிய வெளி யில் அன்றி, நிழலிலேயே உலர்த்திப் பின் சம்பா வைக் கோல் அல்லது தாள் அல்லது கருக்காய் கொண்டு வேக வைத்து, ஒரு சிறு கருப்பும் இலாவகையில் கண்டு எடுத்து, நன்றாகத் தூளாக்கி, வெள்ளைத் துணியில் சலித்து வைத்துக் கொள்வதாகும். நல்ல பசுவின் சாணத்துக்கு மருந்துச்சக்தி இருப்பதை யாரும் அறிவர். விசேட நாட் களில் பஞ்சகெளவியம் என்னும் ஆவிடத்து ஐந்திணை உண்ணும் மரபு இன்று நம்மிடம் உண்டல்லவா! பசுவின் சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் இவை பல தேவா ரத்திலும் பிற இடங்களிலும் ஆவிடத்து ஐந்து எனப் பேசப்பெறுகின்றன. உடலில் உள்ள பல நோய்களை இந்த ஆனிடத்து ஐந்து நீக்கும் திறம் பெற்றதாகும். சாணத்தால் ஆகிய திருநீறும் திருமண்ணும் உடலில் முட்டுக்களில் உள்ள வலியை நீக்கி நலம் செய்வன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/41&oldid=782549" இலிருந்து மீள்விக்கப்பட்டது