பக்கம்:நாடு நலம் பெற.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 41 துளசி- வில்வம்- அருகு மேலும் சிவன் திருமால் இருவருக்கும் உகந்ததான பச்சிலைகளை உலகறியும், பச்சிலை இடினும் பக்தர்க் கிரங்கி, மெச்சிவபதவீட ருள்பவன்' என்று பட்டினத் தார் குறிக்கின்றார். ஆம்! சிவனுக்கு வில்வமும் திருமாலுக்குத் துளசியும் ஏற்புடைத்தன்றோ! இந்த இரண்டும் எத்தனை எத்தனை நோய்களைத் தீர்க்கும் மருந்தாக அமைகின்றன. வீட்டுவாயிலில் மாடம் கட்டி, துளசியினை நட்டு, அதைத் துளசி மாடம் என்றே நகரங்களிலும் இன்றும் பலர் வைத்து வழிபடுவதன் பொருள் என்ன? திருக்கோயிலில் தீர்த்தமும் துளசியும் தருவதன் கருத்தென்ன? காலையில் எழுந்து மூழ்கி, உடல் தூய்மையும் உள்ளத் துாய்மையும் உடையவராய்த் துளசி மாடத்தைச் சுற்றிவரின் இரு' வகைப் பிணிகளும் நீங்கும் வகையில் அதன் மாசற்ற மருந்தாகும் காற்று வழிகாட்டுமன்றோ, அப்படியே வில்வ மரத்தை வீடுதோறும் வளர்த்து அதன் காற்றை உண்டு.நோயற்று வாழ்ந்தவர் பலர். அவை இரண்டும் பலவகையில் மருந்துக்குப் பயன்படும் வகையினை இன்று பலர் மறந்தாரேனும் அவற்றைப் போற்றும் வழக்கத்தை மறந்தார் இல்லை. - வெள்ளெருக்கும் கரும்பாம்பும் பொன்மத்தும் மிலைச்சி எமது உள்ளிருக்கும் பெருமான் நின்திருமார்பில் உற - அழுத்தும் கள்ளிருக்கும் குழல் உமையாள் முலைச்சுவட்டைக் - கடுஒடுங்கும் முள்எயிற்று கறை அரவம் முழைஎன்று நுழையுமால்' நா-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/43&oldid=782553" இலிருந்து மீள்விக்கப்பட்டது