பக்கம்:நாடு நலம் பெற.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாடு நலம் பெற எனத் தில்லைநாதனைக் குமரகுருபரர் பரவிப்பாடுகின் றார். இதில் முதல் அடியில் வெள்எருக்கும், கரும்பாம்பும் பொன்மத்தும் குறிக்கப்பெறுகின்றன. இவை மூன்றும் மருந்துகளாயினவே. எருக்கம் பாலும் தண்டும், வேரும் இலையும் எத்தனையோ வகையில் பயன்படுவதைச் சித்த மருத்துவத்தைத் தேர்ந்து அறிந்தவர் நன்கு உணர்வர். இறைவன் வட திருமுல்லைவாயிலில் எருக்கின் நிழலிலே இருந்தார் எனக்காட்டுவர். அதன் தலவிருட்சமும் எருக் கேயாகும். பழைய எருக்கின் தண்டின் அடியினை அக் கோயிலிலே இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருகின் றனர். அவ்வாறே கரும்பாம்புமாம். பாம்பின் விடம் கொடியதாயினும் அது எத்தனையோ வியாதிகளை நீக்குவதை உலகறியும். இன்றைய மேலை நாட்டு முறை யில் மருத்துவம் செய்யும் 'டாக்டர்'கள் கூட இந்த நாக விடத்தால் பலமருந்துகள் தயார் செய்கிறனர் எனக் காண்கின்றோம். மேலும் அப்பாம்பு நல்ல பாம்பு என அழைக்கப்பெறுகின்றது. உண்மையில் யாராவது தனக் குத் தீங்கிழைத்தாலன்றி-குறுக்கே வந்தால் அன்றி, அது அவர்களை வருத்தாது-வாட்டாது. மேலும் அதன் விடம் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு இறங்கி உயிர்காக்கும் வகையில் செயலாற்றுகின்றது. எனவேதான் கரும்பாம் பைச் சிவன் அணிந்து கொண்டிருப்பதும் திருமால் அதையே பாயலாகக் கொண்டிருப்பதுமாகும். இந்த உண்மை உணர்ந்தேதான் நம் நாட்டவர் நாகபூசை யினைப் பலவகையில் செய்கின்றனர். இலங்கையைச் சார்ந்த 'மணிபல்லவம்’ நாகத்தீவு என்ற பெயரிலேயே இன்றும் விளங்கி, அங்கே நாக கன்னிகையே முக்கிய வழி படு தெய்வமாக விளங்கி நிற்க, தமிழகப் பூசாரியே அதற்குத் தொண்டு செய்து வருவதைப் பலர் அறியார். மூன்றாவதான பொன்மத்து, ஊமத்தம் என்ற பெய ரால் வழங்கப்பெறுகின்றது. இந்த ஊமத்தம் பூவும் தண்டும் வேரும் கிர்ாமங்களில் பல்வகைகளில் மருந்தர்க்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/44&oldid=782555" இலிருந்து மீள்விக்கப்பட்டது