பக்கம்:நாடு நலம் பெற.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 43 பயன்படுவதை இன்றும் காணலாம். எனவே இவை அணிந்த இறைவனை வணங்கினால், நம் நோய் நீங்க, அவன் வைத்தியநாதனாக இருந்து அருளுவான் என்பது திண்ணம். சிவபெருமானுக்கு வில்வம், எருக்கு, ஊமத்தம் அன்றி கொன்றை மலரும் ஏற்புடைத்தாய ஒரு மலராகும். பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன்றிறைஞ்சிடுக ஆங்கொன்றைக் கண்ணியவர்'என்று குமரகுருபரரே தம் சிதம்பர செய்யுள் கோவையில் கூறியிருக்கின்றார். இதைத்தான் சம்பந்தர், 'விரைசேர் பொன் இதழிதர' என்று திருவிழிமிழலைப் பதிகத்தில் (மேகராகக்குறிஞ்சி) பாடியுள்ளார். இதன் மலர்கள் பொன்னிறமாக இருக்கும். அது பல நோய்களுக்குப் பயன்படும் என்பது உறுதி. இன்றைய சித்த மருத்துவர்களுக்கே இதன் முழுப்பயனும் தெரியுமோ என நான் ஐயுறுகின்றேன். மூலிகை வகுப்பு “Vegitable section' arch D Loislostá 'MATERIA MEDICA' என்ற நூலில் திருவாளர் க. ச. முருகேச முதலியார் அவர்கள் எழுதியதை டாக்டர் க. கா. குப்புசாமி முதலி யார் அவர்கள் (இந்திய மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவப் பேராசிரியர்) இது பற்றி நன்கு விளக்குகிறார். இதன் இரண்டாம் பதிப்பு 1951இல் வெளியாகியுள்ளது. (தற்போது இது கிடைக்குமா என்பது எனக்குத் தெரிய வில்லை) அந்நூலில் கொன்றை என்ற தலைப்பில் சாக் கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங் கொன்றை, முட்கொன்றை, மயிர்க்கொன்றை (செம் மயிர்க்கொன்றை) என்ற, பல பகுப்புகள் உள்ளதாகக் காட்டி, ஒவ்வொன்றையும் விளக்கி, அவற்றால் நாம் பெறும்.பயன்களையெல்லாம் விண்டு விண்டு விளக்கிக் காட்டியுள்ளார்கள் (பக் 298-305).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/45&oldid=782557" இலிருந்து மீள்விக்கப்பட்டது