பக்கம்:நாடு நலம் பெற.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 . நாடு நலம் பெற மலக்கிருமி போக்கும் மதுநீர்க் குடலாந் தலத்துநோயுங்குலைந்து சாயும்-நிலத்துக்குள் என்றைக்கும் வாடாத இன்பமலர்க் கொம்பே! கொன்றைப் பசுமலரைக் கொள் (அகத்தியர் குணவாகடம்) என்ற வெண்பாவின் வழியும் வேறுபல வெண்பாக்களா லும் இக்கொன்றையின் சிறப்பை விளக்குகிறார்கள். இதன் விதை, வேர், பட்டை, இலை, பூ அனைத்தும் மருந் தாகப் பயன்படும் விதத்தை நன்கு எடுத்துக்காட்டுகின் றார்கள்.இத்தகைய கொன்றையே இறைவன் தலை யிலை யாக விளங்குகின்றது என்கின்றார் குமரகுருபரர். இதன் சிறப்பையும் இதனைக் கடக்க அஞ்சும் நிலையும் பற்றிப் பாரதம் நமக்குக் காட்டுகின்றது. பாரத யுத்தத்திலேயே சிறந்தவன் அபிமன்யூ அர்ச் சுனன் மைந்தன். அவன் போர்க்களத்தில் புகுந்தபோது கெளரவர் சேனை தாக்குப்பிடிக்காமல் தளர்ந்து பின் வாங்கியது. தோல்வி அன்றே உறுதியாக்கப்பெற்றது போல் துரியோதனனுக்குத் தோன்றிற்று. அபிமன்யூ சிறந்த வீரன். அவன் இறந்தபோது, 'ஈரிரண்டு பேரொழிய மற்றுள்ளார் அழுதிரங்கி என்பட்டாரே என்று சொல்லி வில்லிப்புத்துரார் தாமும் அழுகிறார். துரியோதனன், துச்சாதனன், சகுனி, கண்ணன் ஆகிய நால்வரைத்தவிர, மற்ற இருபக்கத்து மக்கள் அனைவரும் அழுது வருந்தினர் என்கின்றார். அத்தகைய வீரன் எவ்வாறு கொல்லப்பட்டான்! கொன்றை மாலையே அவன் குறுக்கே நின்றது. 'தொக்கலர் கொன்றை யான்தன் தொடையலால் வளைத்த வாறும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/46&oldid=782559" இலிருந்து மீள்விக்கப்பட்டது