பக்கம்:நாடு நலம் பெற.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாடு நலம் பெற "தாளி முருங்கைத்தழை தூதுணம் பசலை வாளிலறு கீரையும்நெய் வார்த்துண்ணின்-ஆளியென விஞ்சுவர் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம் கெஞ்சுவர் பின்வாங்கிக் கேள் (குணவாகடம்) எனவே இறைவன் இம்மை மறுமை வாழ்வுகளை நமக்குச செம்மையாக்கித் தர, இத்தகைய மாலைகளை அணிகின் றான். அருகம்புல்லின் சிறப்பினை அனைவரும் நன்கு அறிவர். - இவ்வாறே சில தலங்களில் உள்ள தீர்த்தங்களும் -மூலிகைகள் அபிடேகப்பொருள்கள் போன்றவை கலந் துள்ளமையின், அவை நோயினை மட்டுமின்றி கன்ம நோயினையும், பைத்திய்ம் போன்றவற்றையும் போக்கும் என அகத்தியர் பரிபூரண நானூறு பகர்கின்றது (216-217). தமிழ் நாட்டில் உள்ள நாங்குனேரி, வானமா மலை, திருவிரிஞ்சிபுரம், திருவிடைமருதூர் போன்ற தலங்களில் உள்ள தீர்த்தங்கள் இத்தகைய சிறப்பின்னப் பெற்றவையாகும். இறைவன் தங்கும் இடங்கள்-தாமரை இங்கே மற்றொன்ற்ையும் நினைவுகூர்தல் வேண்டும். இறைவர்தம் பச்சிலைகளாகிய வில்வம், கொன்றை, எருக்கு, துளசி போன்றவை மட்டுமின்றி, இறைவன் இறைவியர் தங்கும் இடங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும். பிரமன், இலக்குமி, சரஸ்வதி ஆகியோர் அனைவரும் தாமரை மலரில் தங்கி இருப்பதை யாவரும் அறிவர். எத்தனையோ உயரிடங்கள்-பீடங்கள்-தங்க மாளிகைகள் பல இருக்க, நீரில் வாழும் தாமரையினைத் தங்கள் தங்குமிடமாக அவர்கள் கொள்ளக் காரணம் என்ன? படைத்தற்கடவுளாகிய பிரமனும் கல்விக்கரசியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/48&oldid=782563" இலிருந்து மீள்விக்கப்பட்டது