பக்கம்:நாடு நலம் பெற.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 47 = جستجسسیتی-میچس கிய சரஸ்வதியும் திருமாலின் துணைவியாகவும் செல்வத் துக்கு அதிபதியுமாகிய இலக்குமியும் தாமரையை ஏன் தேர்ந்தெடுத்தனர்? முன் காட்டிய பெருமரங்கள், எருக் கஞ்செடி போன்றவற்றின் அடியில் இறைவன் தங்கிய நிலைதான் இதுவும். தாமரை வெறும் அழகுக்காக மட்டும் அமைவதன்று நீரில் நின்று நீரளவேயா வளர்ந்து மலர்ந்து நிற்கின்ற தாமரை, மனநோய்க்கும் உடல் நோக்கும் பலவகையில் உதவுகின்றதைச் சித்தரும் நன்கு அறிவர், . பருத்தநற் றாமரைப்பூ பல்வாந்தி நோயைத் -துரத்திவிடும் இன்னும் சொல்லவோ- கரத்தில் எடுத்தனைக்கக் கண்குளிரும் ஏகும் சுரமும் எடுத்தவி தாகமும்போம் என்’ J (அகத்தியர் குண்வாகடம்) என்று மூலிகை பொருட்பண்பு பற்றிய நூலில் (பக்.377) மேற்கோளாகக் காட்டப்பெறுகின்றது. மலர் பிறவற் றைப் போல் நோய் நீக்குவதன்றி அதை எடுத்தணைத் தால் கண்குளிரும் என்கின்றார். மார்பில் அனைத்தால் கண் குளிரும் என்றால் உள்ளம் குளிர்ந்து உடல் நலம் பல்கப்பெற்று, அதே வேளை தெய்வநெறி போற்றும் உணர்வும் பிறக்குமல்லவா! எனவே தெய்வங்கள் அமர்ந் தும் கையில் ஏந்தியும் உள்ள தாமரை உடலுக்கும் உயிருக் கும் உற்ற மருந்தாக அமைகின்றது என எண்ணல் வ்ேண் டும். இவ்வாறு படைத்தான் படைத்த படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க" என்று விவிலிய நூலுடையார் கூறுவது போன்று உலகில் காணும் மரம், செடி, கொடி புல், பூண்டு, காய், கனி, மலர் பிற அனைத்தையும் நம் நலனுக்காகவே இறைவன் படைத்தான் என எண்ணி அவனை வணங்கி வழிபடுவோ t# fT # ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/49&oldid=782565" இலிருந்து மீள்விக்கப்பட்டது