பக்கம்:நாடு நலம் பெற.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வளமே நாட்டு வளம் 49 இத்துணை இலக்கிய இலக்கண நயம்படப் பாடும் புலவரும் கண்முன் காட்சி தருகின்றார். எனவே இதை இங்கே எடுத்துக்காட்டினேன். தவறாயின் மன்னியுங்கள். இனி நம் பெர்ருள் பற்றி மேலே செல்லலாம். மூலிகை கிறைந்த மலைகள் இம் மூலிகைகள் நிறைந்த மலைகளையே நம்மவர் தெய்வங்களாகப் போற்றி வந்தனர். இவற்றுள் முக்கிய மானவை திருக்கழுகுன்றமும் திருவண்ணாமலையுமாம். கழுக்குன்றிலே பலப்பல மூலிகைகள் படர்ந்திருக்கும். அங்கே சென்று சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் மூழ்கி, உதயத்துக்குமுன் கழுக்குன்றினை வலம் வந்தால் எல்லாப்பிணியும் அகலும் என்பது உண்மை. இன்றும் பலர் அவ்வாறு செய்கின்றனர். சென்னையில் சிறந்த மருத்துவராக வாழ்ந்து மறைந்த டாக்டர். குருசாமி முதலியார் அவர்கள் (அவர்கள் பெயரிலேயே வட சென் னையில் ஒர் உயர்நிலைப்பள்ளி உள்ளது) தம்மிடம் வரும் நோயாளிகளை கழுக்குன்றத்துக்கே ஆற்றுப்படுத்துவர். தம்மிடம் நோய் காட்டி மருந்துண்ண வருபவர்களை, அவரவர்தம் நோய் நிலைக்கு ஏற்ப, ஒரு திங்கள், நாற்பது நாள், இருதிங்கள், முத்திங்கள் எனக் காலவரையறை செய்து, அவர்கள் அக்கால எல்லைவரையில் திருக்கழுக் குன்றம் சென்று விடியலில் எழுந்து சங்குதீர்த்தத்தில் மூழ்கி, சூரியன் புறப்படுமுன் மலையை வலம் வரவேண் டும். அவ்வாறு வந்தபின், தான் மருந்து தருவதாக அவர் கூறுவர். ஆனால் பலர் அவ்வாறு சென்று வந்து, அவரை வணங்கி, தம் நோய் நீங்சுப் பெற்றதாகக் கூறி வாழ்த்திச் செல்வர். அங்குள்ள மலையின் மூலிகைகளும் சங்கு தீர்த் தத்தில் உள்ள நோய் தீர்க்கும் மருந்து அமிசமும் அவர் களை நோய். நீங்கப் பெறச் செய்கின்றன. இவ்வாறே திருவண்ணாமலையினை வலம் வந்து நோய் நீங்கப் பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/51&oldid=782571" இலிருந்து மீள்விக்கப்பட்டது