பக்கம்:நாடு நலம் பெற.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாடு நலம் பெற றவர் பலராம். காஞ்சி கச்சபேசர் குளத்தில் தொடர்ந்து மூழ்கி, உடல்புறத்தில் தோல் பற்றி வரும் பல நோய்கள் நீங்கப் பெற்றவரும் உளர். இவ்வாறு மலைகளும் குன்றுகளும் குற்றால அருவி போன்ற அருவிகளும் இந்த மூலிகை வளர்த்தினலேயே தெய்வ நலம் பெற்றுச் சிறக்கின்றன எனக்கொள்ளல் வேண்டும்.இதனாலே இத்தகைய மரம் செடி கொடிகளை அழிக்கலாகாது என்பர். அறவோர் தாம் வளர்த்ததோர் நச்சு மாமரம் ஆயினும் கொலார்' என்று மணிவாசகர் கூறுவர். இன்று இந்த நிலைமாறி கா.ழித்தலே கருத் தாகக் கொண்டு மக்கள் செயல் படுகின்றனர். அரசும் கவலைப்படுவதில்லை. அதனால் நோய்களும் மருந்தகங் களும் பல்கிப் பெருகுகின்றன,மனிதன் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்ப்பின் வழியுண்டு. எங்கே எண்ணப் போகி றான்? - - சென்னையில் வாழ்ந்த தோல் பற்றிய வியாதி தீர்ப் பதில் வல்லவர், மறைந்த டாக்டர். தம்பையா அவர் களும் தோல் பற்றிய எந்த நோய்க்கும் ஆங்கில மருந் தினை நாட வேண்டாம் என்பர். அவர் சித்த மருத்துவத் தோடு ஆயுர் வேதத்தினையும் கலந்து நம்நாட்டு முறைப் படி வழிவகுத்து மருந்தினைத் தருவார். எந்த ஆங்கில மருத்துவராலும் முயன்று முடியாத ஒரு குழந்தைக்கு உண்டான புண்கள் பற்றி அவரிடம் சென்றபோது, அவர் தந்த மருந்து தெய்வ அருளாக அமைந்தது. குழந்தை உடலெல்லாம் பெரும்புண் - பெருநாற்றம்- ஒரு வேளை உயிரும் நீங்கி விடுமோ என்ற அச்சம், அந்த நிலையிலே அவர் அக்குழந்தையைக் கண்டார் (1944 இல்). உடனே நால்வகை மருந்தினை எழுதிக்கொடுத்தார். துருசு. மனோசிலை, கரட்டுத் தாளகம், நெல்லிக்காய் கந்தகம்' என்ற நான்கினையும் எடுத்துத் தூளாக்கித் தேங்காய் எண்ணெய் இட்டுக் காய்ச்சி, அதைப் புண்ணின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/52&oldid=782573" இலிருந்து மீள்விக்கப்பட்டது