பக்கம்:நாடு நலம் பெற.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி வழி நாட்டுக் கல்வி நலமுற உலகில் உயிர் தோன்றிய நாள் இன்று கணக்கில் காட்ட இயலா நிலையில் உள்ளது. ஒரறிவு உயிர் தொடங்கி, ஆறறிவு பெற்ற மனிதன் நிலை வரை எத்தனை எத்தனை கோடி ஆண்டுகள் கழிந்தனவோ! ஆய்வாளர்கள் இவற்றை அறுதியிட முயல்கிறார்கள். எனினும் முற்றிய முடிவினைப் பெற அவர்களால் முடிய வில்லை. இந்த நிலையில் ஆறறிவுபெற்ற மனிதன் மனித னாக வாழத் தொடங்கிய நாளும் மிகச் சேய்மையதே யாகும் வகையில் மாறிவிட்டான். சிலவிடங்களில் பழைய மிருக நிலைக்கேயும் சென்று விடுகிறான். அவனை மனித னாக வாழ வைப்பன கல்வியும் அறிவுமேயாம். தொல்காப்பியர் இந்த அறிவு இல்லாத மனித உருவில் உள்ளவனுக்கு வேறு பெயரே கொடுக்கின்றார். "மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்று பகுத்தறிவைநல்லதன் நலனும் தீயதன் தீமையும் உணர்ந்து செயலாற் றும் அறிவை-உடையவர்களை மக்கள் என்றே காட்டுகி றார். ஆனால் மனித உருவாகி அறிவில்லாதவனை விலங் கொடு சேர்க்கின்றார். * 'மாவும் மாக்களும் ஐயறி வினவே - பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' என அவர்களை விலங்கொடு சார்த்தி 'மாக்கள்' என்ற பெயர் கொண்டு அழைக்கின்றார். திருவள்ளுவரும் விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ மேனை யவர்' என்று பிரித்து, நா-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/75&oldid=782625" இலிருந்து மீள்விக்கப்பட்டது