பக்கம்:நாடு நலம் பெற.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 75 அதிகாரத்தின் முதற்பாடலாகும் மேலும் அக்கல்வி எதனாலும் கெடாது என்றும் அழியாது என்றும் அறுதி யிட்டுக் கூறுகின்றது. : 'வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்; எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற' (விச்சை-வித்தை) என்பது நாலடி. இவ்வாறே மற்றொருவர் அதன் சிறப் பினை, வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது, கொடுத்தாலும் நிறையொழியக் குறைபட ாது. கள்ளர்க்கோமிக அரிது, காவலோ மிகளளிது, கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதேனோ! என்கிறார். வள்ளுவரும் ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்று மனிதனுக்கு வேண்டுவது கல்விச் செல்வமே எனக் காட்டுவர். உலகுக்கு அறநெறி உணர்த்திய வள்ளுவர் இக்கல்வி யைப்பற்றி கல்வி. கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என நான்கு அதிகாரங்களால் விளக்குகிறார். இத்தகைய கல்வியினை நாட்டிற்கு நல்ல வகையில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உடையது என்பதைக் காட்டவே, இந்த நான்கு அதிகாரங்களும் 'இறைமாட்சி' என்ற அரசுடைமை அதிகாரத்திற்கு அடுத்தபடியாக அமைக்கப் பெற்றுள்ளன. இறை மாட்சியிலும். - தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு' என்கிறார். இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/77&oldid=782627" இலிருந்து மீள்விக்கப்பட்டது