பக்கம்:நாடு நலம் பெற.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாடு நலம் பெற அரசன்மேல் ஏற்றிக் கூறினாலும், இதை நாட்டு மக்களுக்கு நல்கி நலம் காண வேண்டியவன் அரசனே என்பதும் அடங்கிக் கிடக்கிறது. எனவே நாட்டை ஆளும் நல்லரசுகள், அந்நாட்டு மக்கள் அனைவரும் கற்றவர் எனும் வகையில் கல்வியை வளர்ப்பதையே முதற் செய லாகக் கொள்ள வேண்டும். இக்கல்வி எத்தகையது-ஏன் கற்க வேண்டும்இதனால் என்ன பயன்? என்பன போன்ற வினாக்களுக் கெல்லாம் வள்ளுவரும் பிறரும் தக்க பதில்கள் தந்துள்ள னர். இன்று நம் நாட்டில் வழங்கும் கல்விமுறை ஏற்றதா என்பதை எண்ணிப்பார்க்க அவை வழி செய்யும். உலகில் பிறந்தவர் யாவரும் கண் இலரேல் சிறக்க வாழ முடியாது. அந்தக் கண்கள் இரண்டும் முகத்தில் உள்ளன. எனினும் வள்ளுவரும் பிறரும் கல்வியினையே கண் என்பர். 'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்' என்பது குறள். எனவே இப்புறக்கண் வெறும் பார்வைக்கென அமை யினும் கல்வி எனும் அகக்கண்ணே மனிதனை, மனிதனாக வாழ வைக்க உதவுவதாகும். திருமூலர் 'முகத்தின் கண்கொண்டு காண்கின்ற முடர்கள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம் (2944) என்பர். எனவே கல்வி, உலகிடை ஆறறிவுடையவனாக மனிதன் வாழ, அவர் கண்ணாக-கருத்தாக-எண்ணாக எழுத்தாக-எல்லாமாக விளங்குவது கல்வி என உணர்தல் வேண்டும். o இக்கல்வி எப்படி மனிதனை மனிதனாக்குகின்றது? இதை ஏன் கண் என்றார்கள்? ஒளவையும் 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என ஏன் கூறினார்? ஆம்! அது அவனை வாழ்வுப் பாதையில் தடுக்கிவிழாமல் காப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/78&oldid=782629" இலிருந்து மீள்விக்கப்பட்டது