பக்கம்:நாடு நலம் பெற.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 77 பாற்றுகிறது, சமுதாயத்தில் உயரச்செய்கிறது. தன்னைப் போல் பிறரையும் ஒத்து நோக்கி வாழச் செய்கிறது. வாழ்வின் தேவைகளை எல்லாம் தேடிக்கொள்ள உதவு கிறது. கற்றவன் தன்னை மட்டுமன்றித் தரணியில் வாழும் எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி, தான்பெற்ற இன்பம் பெறும் இல்வையகம் என்ற உணர்வில் தலை நின்று எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பான்-நடப் பான்-வாழ்வான். வள்ளுவர், . “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' என்பர். ஆம்! இந்த நிலைதானே உலகுக்கு வேண்டப்படுவது. இந்த நல்ல உணர்வு இருப்பின் இன்று உலகில் நடைபெறும் எல்லாக் கொடுமைகளும் இல்லா தொழியுமே. மேலே கண்ட குறளில், கற்றார்’ என்னாது, கற்றறிந்தார்’ என்கின் றார். அறிவு அதே நிலையில் மனிதனை ஆட்கொள்ளும் திறத்தால் ‘அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்ய விடல்' (203) 'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை' (315) என்பன வள்ளுவர் வாக்கு. எனவே அறிவுக்கு இலக்கணம் காட்டுவர். இக்குறளை அறத்துப்பாலின் தீவினை அச்சம் என்னும் அதிகாரத்தில் வைத்துள்ளார். அறம் கூற வந்த வள்ளுவர் தீய பாவச் செயல்களுக்கு அஞ்சும் அறத்தை ஒரு அதிகாரத்தால் விளக்கும் வகையில், இக்குறளை அந்த அதிகாரத்துள் அமைத்துள்ளார். கற்று அதனால் பெற்ற அறிவு, உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவு, கேட்டு அறியும் அறிவு, உற்று உணரும் அறிவு போன்ற வகையில் பெறும் எல்லா அறிவிலும்-அவற்றின் செயல்பாடுகளை யெல்லாம் உள்ளடக்கிய நல்லறிவினை இங்கே இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/79&oldid=782631" இலிருந்து மீள்விக்கப்பட்டது