பக்கம்:நாடு நலம் பெற.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாடு நலம் பெற விளக்குகிறார். இங்கே வள்ளுவர் பின்விளக்க இருக்கும் கல்வியான் வரும் அறிவின் மிக்கு, இச்செயலால் வரும் அறிவே சிறந்தது என உணர்த்துகின்றார். ஆக, கல்வி, அதன்வழியே பெறும் அறிவும் வையம் வாழத் தான் வாழ வேண்டும்' என்பதையே வற்புறுத்துவன. எனவே கல்வியும் அக்கல்வியால் பெறும் அறிவும் மனிதனை மனிதனாக- மற்றவரை பிற உயிர்களைஒத்து நோக்கி வாழ்பவனாகச் செய்கின்றன என்பது தெளிவு. பிறர் வாழத் தாம் வாழவும் பிறர் வாடத் தாம் வாடவும் மனிதன் பழகிவிடுவானானால் நாட்டில் போரும் பிணக்கும் கொள்ளையும் கொலையும் பிற கொடுமைகளும் உண்டாக வழியேது? இன்று நாட்டிலும் உலகினும் காணும் எண்ணற்ற கொடுமைகள் யாவும் ஒழியுமல்லவா? ஆம்! ஆனால் நாட்டில் இன்று அத்தகைய கல்வி உண்டா? அண்ணல் காந்தி அடிகள் கல்வியின் குறிக்கோள் &T 3.5amsugs) stair Lang; “The goal of Education is to establish a non violant and no exploitaing social and econamic order' என விளக்குவர். இத்தகைய கல்வி அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் உரிமை பெற்று அரை நூற்றாண்டை எட்டும் நிலையிலும் நாம் பெற்றோமா? இல்லையே! இந்த அவல நிலையினை 1986இல் இந்திய அரசாங்கம் கல்விச் சீர்திருத்தத்துக்கென அமைத்த குழுவின் செயலர் திரு. இராமமூர்த்தி அவர்கள் அந்தக் குழுவின் ஆய்வேட்டின் முன்னுரையில் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே அதை அப்படியே ஆங்கிலத் திலேயே தருகிறேன். - “One fundamental reason for failure has been that while we go on making radical protestations, our education to this day continues to be governed by the same assumptions, goals and values that governed it in the

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/80&oldid=782635" இலிருந்து மீள்விக்கப்பட்டது