பக்கம்:நாடு நலம் பெற.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 83 'கூட்டத்தில் கூடி நின்று கூடிப்பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே நாளில் மறப்பாரடி' என்று பாரதி பாடிய பாட்டிற்கு இலக்கிய எடுத்துக் காட்டாக அன்றோ மக்களும் அரசுகளும் வாழ்கின்றன. தமிழ் நாட்டுக் கல்வியின் அவலத்தை - அறுபது ஆண்டு களுக்கு மேலாக அதில் பட்டுழன்ற நான்- கல்வித் துறை யிலேயே காலம் கழித்த நான் 1991இல் கல்வி எனும் கண்" என்ற நூலில் தெளிவுபட விளக்கியுள்ளேன். அந்நூலைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பி னேன். ஆனால் ஏற்றுச் செயல்படுவார் இல்லையே! இன்றைய கல்வி நிலை பற்றி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 1920-க்கு முன் பாரதி வெறுத்துக் காட்டிய அந்த அவலநிலை இன்றும் அகலவில்லையே.(வீதிதோறும் இரண்டொரு பள்ளி) வேண்டும் என அவன் கனவு கண்டான். ஆம்! இன்று வீதிதோறும் இரண்டொரு பள்ளிகள் கிராமங்களில் கூட இருக்கின்றன. ஆனால் அவன் விரும்பிய பள்ளிகள் இல்லை. எல்லாம் ஆங்கிலப் பள்ளிகள் அல்லவா! அந்த ஆங்கிலப் பள்ளிக்குப் பாரதியை அனுப்பிய அவன் தந்தையையும் அக்கல்வியை யும் எண்ணி எண்ணி எப்படி நைகிறான். நெல்லையூர் சென்று அவ்வூணர் கலைத்திறன் நேருமாறெனை எந்தை பணித்தனன் புல்லை உண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம் நல்ல தென்றொரு பார்ப்பன ப் பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தை தான் அல்லல் மிக்கதோர் மண் படு கல்வியை ஆரியர்க்கிங்கு அருவருப் பாவதை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/85&oldid=782644" இலிருந்து மீள்விக்கப்பட்டது