பக்கம்:நாடு நலம் பெற.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாடு நலம் பெற படிக்க அனுப்பிய நிலையினையும் நம்மைப் பற்றி ஒன்றும் அறியா நிலையினையும் பிறவற்றையும் அடுக்கி அடுக்கி அடுத்தடுத்துக் காட்டுகிறானே! "கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்.பின் கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவிஉளம் காண்கிலார் வணிக மும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார் துணியும் ஆயிரம் சாத்திரம கற்கிலும் சொல்லுவார் எள்துணைப் பயன் கண்டிலார்' என்றும், சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் பேர ருள் சுடர் வாள் கொண் டசோகனார் பிழை படாது புவித்தலங் காத்ததும் வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்திவென்ற சிவாஜியின் வெற்றியும் அன்ன யாவும் அறிந்திலர் பாரதர் ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்’ என்றும் உளம் நைந்து உருகிப் பாடுகிறான். அவன் ஒரு வேளை இப்போது தெருவுதோறும் ஆங்கில பள்ளிக்உள்ள நிலையில் இருந்தால் எ ன் ன செய்வானோ,பாடுவான்- வாடுவான்- அன்றி வீடுதேடி ஒடுவான். ஆம்! இந்த நிலை மாற வழி இல்லையா? இந்தப் பாழ்படு கல்வி இன்றும் வாழ்வதைத்தான் தன் முன்னுரையில் திரு. இராம மூர்த்தி காட்டியுள்ளார் என்பதை முன்னரே (ஆங்கிலத்தில்) குறித்துள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/86&oldid=782646" இலிருந்து மீள்விக்கப்பட்டது