பக்கம்:நாடு நலம் பெற.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாடு நலம் பெற நாட்டுப் பல்கலைக்கழகமும் தமிழ் அறிஞர் (அரிஞர்) களும் கூறு நிலை வேறு எந்த நாட்டிலாயினும் - எந்த மொழியிலாயினும் முடியுமா! இடைக்காலத்தில் வடமொழியொடு கொச்சைத் தமிழைக்கலந்து ‘மணிப்பிரவாள நடையில் பேசுவதை யும் எழுதுவதையும் தமிழர்பெருமையாகக் கொண்டனர். 'மணியும் பவளமும் கலந்ததாகப் பெருமை கொண்ட னர். ஆனால் அதைக் காலத்தேவன் அழித்துவிட்டான். இப்போது அதே மணிப்பிரவாளம் ஆங்கிலம் அறியாத மக்களிடையே கூட, தமிழோடு கலந்து வழங்குகிறது. இதையும் காலத்தேவன் தமிழ் ஆற்றல் கொண்டு அழித்து விடுவான் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இன்றைய நிலையை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளி (Kinder garden) என்ற பெயரில் ஆங்காங்கே முளைத்துள்ளவற்றில், குழந்தைகளை ஆங்கி லத்தில் பேசத்தான் பழக்குகிறார்கள். அந்த வகுப்புகளில் தமிழ் எழுத்தினைக் கூடச் சொல்லிக் கொடுப்பதில்லை. (எங்கள் பள்ளியில் முதல் குழந்தை வகுப்பிலேயே I.K.G. தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கற்றுத் தருகிறோம். அது பலருக்கு வியப்பாக இருக்கிறது.) அந்தக் குழந்தை கள் படிக்கவும் எழுதவும் பயன்படுத்தப்பெறும் நூல்களும் அச்சிட்ட எழுத்து நூல்களும் Copy Works) பாவம்-அக் குழந்தைகள் தூக்கமுடியா அளவில் உள்ளதை நான் கண்டு கண்டு கவலைப்படுவதுண்டு. குழந்தை வகுப்பில் ஒரு பிள்ளைக்கு ரூபாய் இருநூறு அளவில் நுால்களும் குறிப்பேடுகளும் வாங்க வேண்டும் போலும். (நுால்களின் விலைகள்- தாள் விலைகள் ஏறியிருப்பினும் இப்பெருந் தொகை தேவையா என என்னை நானே கேட்டுக் கொள் வதுண்டு) தமிழக அரசு இக்குழந்தைகள் பள்ளிகளை ஒழுங்குபடுத்தி, ஒரு தனிப்பகுதியேயாக்கி தனி இயக்குநர் அமைத்து நடத்தப்போவதாகச் சொல்லிக் கொண்டு வருகிறது. அண்மையில் கூட, அது பற்றிக் கல்வி அமைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/88&oldid=782650" இலிருந்து மீள்விக்கப்பட்டது