பக்கம்:நாடு நலம் பெற.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி.நலமுற 87 சர் எங்கோ ஒரு கூட்டத்தில் பேசியதாகச் செய்தித்தாள் கள் வெளியிட்டிருந்தன. ஆயினும் இதுவரையில் ஒரு ஏற்பாடும் காணோம். அவைகளைச் செம்மைப்படுத்தி, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண் டும் எனச் சட்டம் செய்து, மேற்பார்வையாளர்களையும் அமர்த்தி, தக்க- நல்ல இடங்களிலேயே இருக்க ஏற்பாடு செய்ய உடன் அரசு ஆவன காண வேண்டும். . - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சுதந்திரம் பெற்ற பிறகு சில ஆண்டுகள் வரையிலும் கல்வி மாநிலத்துக்கே உரிய பொருளாக இருந்தது. அந்தந்த மாநில மக்கள் நலம் கருதி, அவர்தம் மொழி, வாழ்வு, பண்பாடு, தொழில் வளம், நாட்டு அமைப்பு, பிற பொருள்கள் பற்றிய நிலை யிலே அக்காலத்தில் பாடங்கள் அமைந்தன. அதே வேளை யில் உயர்நிலையில் ஒன்றிய பர்ரதம் பற்றியும் அன்று ஆண்ட ஆங்கில அரசு பற்றியும் உலக வரலாறு பற்றியும் அறியவும் வாய்ப்பு இருந்தது. நான் மேலே காட்டியபடி கல்வி முறையினை ஆங்கிலேயர் காலத்தை ஒட்டியதாகவே இன்று வரை வைத்துக் கொண்டுள்ள நாம், கல்வியின் நிலையினை மாநில, மத்திய அரசுக்கு உரிய பொதுப் பொருளாக்கி விட்டோம். அதனால் எண்ணற்ற இன்னல் களை நாம் இன்று அனுபவித்து வருகின்றோம். இன்று தமிழ் நாட்டில் மாநிலப் பள்ளிகளோடு, மத்தியப்பள்ளிகள் போட்டியிடுகின்றன, அவற்றுள் தமிழ் நாட்டில் தமிழ் மொழி பயில வேண்டும் என்ற நிலை இல்லை வங்காளத்தில் வங்காளம் பயில வேண்டும் என்ற நிலை இல்லை. பேருக்கு மும்மொழித்திட்டம் என அமைத் தாலும் அம்மூன்றில் ஒன்று முக்கியமாக மாநில மொழி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மும்மொழி யெனவே ஆங்கிலம், இந்தி, வேறு வடமொழி அல்லது வேற்று வெளி நாட்டு மொழிகள்ாகிய பிரஞ்சு போன் றவை மாணவர் எடுத்துக் கொள்ள்லாம். ஏதோ தாராள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/89&oldid=782652" இலிருந்து மீள்விக்கப்பட்டது