பக்கம்:நாடு நலம் பெற.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாடு நலம் பெற மாக அவர்கள் இருப்பதைப் போலக் காட்டி, தாய் மொழியை மட்டந்தட்டி கீழ் நிலைக்குக் கொண்டு வருவதே இந்த மொழிக் கொள்கையின் நோக்கமாகும். எத்தனை மொழியினைப் பயில வேண்டி வந்தாலும் அவரவர் தாய்மொழி-தமிழ் நாட்டில் தமிழ் அதில் ஒன்றாக இருக்கப் பார்ப்பது அரசாங்கத்தின் கடமையல் லவா! கல்வி மத்திய மாநிலங்களுக்குப் பொதுவானமை யின் மத்திய அரசு தன் மனம் போல, மாநில மக்களுக்குத் தேவையற்ற கல்வியைப் புகுத்தலாமா? இந்தி' நாட்டு மொழி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் தாய் மொழியே அறியாத ஒருவனுக்கு ஒன்றும் புரியா நிலையில் மற்றொரு மொழியைத் திணிக்க நினைப்பது தவறு அல்லவா! தமிழக அரசு, தம் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்க வில்லை என்பதற்காக, மாற்று வழியில் மத்திய கல்விக் கூடங்களைப் பல பெயர்களில் நிறுவிஅவற்றின் வழியாக அந்த மொழியைப் புகுத்த நினைத் தால் நாடு வருங்காலத்தில் என்னாகும். இந்திய விடுதலை என்றால் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதி கூறியபடி, நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும்மாநிலத்துக்கும் உரிமைகள் உண்டென்பதுதானே பொருள். ஆனால் நான் சொன்னபடிதான் நீ கற்க வேண்டுமென்று மற்றவர்களை மத்திய அரசு வற்புறுத்த லாமா? பள்ளியின் மேல் இரண்டு வகுப்புகளில் மொழி நிலை இன்னும் கேவலமாக்கப்பெறுகின்றது. அந்த இருவகுப்பு களிலும் (+2) ஒரே ஒரு மொழி மட்டும் பயின்றால் போதும். ஆங்கில வெறி பிடித்த தமிழர்கள் மட்டு மன்றிப் பிற மாநிலத்தவரும் ஆங்கிலம் ஒன்றையே மொழி யாகக் கொள்ளுகின்றனர். ஆனால், அதன்வழி அவர்கள் கல்லூரியில் சேரச் சங்கடங்கள் உண்டாகின்றன. தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/90&oldid=782656" இலிருந்து மீள்விக்கப்பட்டது