பக்கம்:நாடு நலம் பெற.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற $9 நாட்டுப் பள்ளிகளில் இருமொழிகளொடு நான்கு பாடங்கள் படிக்கும் மாணவருடன் இவர்களை எப்படி ஒத்துப் பார்க்க முடியும்? எனவே பல கல்லூரிகள் இந்த மத்திய பள்ளிகளில் பயில்வருக்கு இடம் தர முற்படுவ தில்லை. தமிழக அரசு அவர்கள்மேலும் இரக்கப்பட்டு, அவர்களும் தமிழர்களானதால் - அவர்கள் தாய்மொழிக் குத் துரோகம் செய்தாலும், கல்லூரிகளில் சில இடங்களை இம்மாணவர்களுக்கு ஒதுக்குமாறு ஆணையிட்டுள்ளது, எனினும், வாணிக வகையிலே அப்பள்ளியை நடத்திய பலர் தத்தம் கல்விக்கூடங்களைத் தமிழகக் கல்விக்கூட்ங் களாக மாற்றிவருகின்றனர். தமிழக அரசும் பள்ளியை நடத்த அமைத்த கடுபிடி கொண்ட வலிய திட்டத்தைத் தளர்த்தி, புதிய பள்ளிகள் தொடங்கத் தாராளமாக அனுமதி வழங்க முற்பட்டுள்ளது. எனினும் அமைப்பு முறையினைத் தேர்ந்தெடுப்பதில், அவசரத்தில், அக்கறை காட்டவில்லை. மத்திய அரசும் அப்படித்தான். இந்த மத்திய அரசு நவோதா போன்று வேறு வேறு பெயர் களில் பள்ளிகளைத் தொடங்கியும் மாநிலங்களின் முழுக் கல்வி உரிமையையும் பாழாக்குகின்றது. மத்திய அரசின் இந்தப் போக்கிற்கு இடையே தமிழக அரசும் கல்வித்துறையைச் சரியாகப் போற்றவில்லை என்பேன். பத்தாம் வகுப்பு வரையில் எத்தனை வகைப் Lign of 567, § {p,3,3406 filamaulo (Oriental Schools). பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனப் பலவகை யில், பல்வேறு பயிற்று மொழிகள் அமையப் பல்வேறு பாடத்திட்டங்களை அமைத்து நடத்துகின்றது. இது எவ்வாறு பொருந்தும்? சில பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழி, சிலவற்றில் இரண்டும் உள்ளன.இவற்றில் தமிழ் வழிப் பயிலும் மாணவர்_மேல் கல்லூரியின் எல்லாப் பர்டங்களையும் ஆங்கிலத்தில் பயில அவதி உறுவதையும் அதனால் தகுதி இழப்பதையும் காண்கிறோம். மற்றப் பள்ளிகளில் இருப்பது போல் அனைத்துப் பள்ளிகளிலும் சில வகுப்புகள் தமிழ் பயிற்று மொழியாக அமைத்து நா-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/91&oldid=782658" இலிருந்து மீள்விக்கப்பட்டது