பக்கம்:நாடு நலம் பெற.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாடு நலம் பெற அப்படியே கல்லூரிகளில் சில பாடங்களையாவது தமிழில் சொல்லித் தரும் ஏற்பாட்டைச் செய்யலாமே! இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில், அவற்றிற் கெனத் தமிழ்ச் சொற்கள்ை ஆய்ந்து தனித்தனி அகராதி வெளியிட்டுத் தமிழிலேயே நூல்களையும் வெளிக் கொணர்ந்தாரே!பண்டைத் தமிழரும் திராவிடரும் வரிசை யாக ஆளுகின்ற நாட்களில் இவை மறக்கப் பெற்றனமறைக்கப் பெற்றன. அன்றே அந்த நூல்களின் வழி பயிற்று மொழி அமைந்திருப்பின் இந்நாள் தமிழ் "எங்கும் தமிழ்-எதிலும் தமிழ் என்று முழங்கும் நிலை மாறி உண்மையிலேயே தமிழ் எங்கும் நிற்ைந்திருக்குமே! புத்தம் புதிய கலைகள்- பஞ்ச பூதச் செயல்களின் சேர்க்கைகள் யாவும் மெத்த வளருது மேற்கே- அந்த மேன்மைச் சிறப்பு தமிழ்மொழிக் கில்லை' 'சொல்லவும் கூடுவதில்லை- அதைச் சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழ் இனிச் சாகும்- அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஒங்கும்' "என்றந்தப் பேதை உரைத்தான்' என்று பாரதி நைந்து பாடி, அந்தப் பேதையைக் கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்' என விளக்கியும் காட்டியுள்ளார். ஆம்! தமிழனே இவ்வாறு சொல்கிறான். அதனால் தானே பெரியவர்கள் தாய்க் கொலை சால்புடைத்து என்பாரும் உண்டு' என்று பாடிச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டுப் பாட அமைப்பிலும் பழைய நிலையே உள்ளது. பெருமாற்றங்கள் காணவேண்டும். நான் முன்னே காட்டியபடி- பாரதியின் பாடலின்படி-அறிய வேண்டுவனவற்றை அறியாது- தேவையற்ற-வேண்டத் தகாதவற்றையெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் கள் கற்க வேண்டியுள்ளன. எத்தனையோ சீர்திருத்தக் குழுக்களை மத்திய மாநில அரசுகள் அமைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/92&oldid=782660" இலிருந்து மீள்விக்கப்பட்டது