பக்கம்:நாடு நலம் பெற.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்வி நலமுற 93 சொல்லித் தரும் நிலை இருந்தது போலும். எனவே வினாத்தாள்கள்ை அண்மையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்பி, அங்கிருந்து அன்றாடம் தேர்வுக்கு 30 நிமிடம் முன்புதான் தலைமைத் தேர்வாளர் எடுத்துச் செல்ல ஏற்பாடு பின்பு இருந்தது. இப்போது எப்படியுள்ளதோ? நான் அறியேன். ஆயினும் இவற்றுக் கெல்லாம் மேலாக, மாணவர்தம் உண்மைத்திறனை அறிய வேண்டுமாயின், நாடு நல முற நல்ல வருங்காலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின், நான் மேலே சொல்லிய முறைதான் சிறந்தது; அதுவே நம் நாட்டில் நெடுங்காலம் பழக்கத்தில் இருந்தது- நல்லவவரைத் தேர்ந்தெடுக்க வழி காட்டியது- வழி காட்டுவது. எனவே அரசாங்கம் விரைந்து அந்த வகையில் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். பல்கலைக் கழகங்களும் அந்த முறை யினையே பின்பற்ற வேண்டும். தேர்வுகள் நடத்துவது எதற்காக? மாணவர் பயின்ற பாடங்களில் நன்கு தேர்ச்சி பெற்று விளக்கமுற்றுள்ள னரா என அறிவதற்காக ஆனால் அந்தவகையில் தேர்ச்சி பெறாதவரையும் மேல் வகுப்பிற்கு அனுப்புவது எப்படிப் பொருந்தும்? பட்ட வகுப்பில் முதலாண்டு இரண்டாம் ஆண்டுகளில் ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர் கூட மேல் வகுப்பிற்கு மாற்றப் பெறுகின்றனர். இறுதி ஆண்டாகிய,மூன்றாம் ஆண்டில் தேர்ச்சி பெற்றும் முதல் ஆண்டின் பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உள்ளனர். இந்த முறை ஏற்புடைத்தாகுமா? முதலாண் டின் பாடங்களையே நன்கு பயின்று தேர்ச்சி பெறாதவர் பின், இரண்டாவது ஆண்டுப் பாடங்களுடன் இதையும் பயின்று எப்படித் தேர்ச்சி பெற முடியும்? ஆக, எதிலும் ஆழ்ந்த அறிவு பெறா நிலைக்கே அம்மாணவர் தள்ளப் பெறுகின்றார். இதே நிலைதான் மேல்பட்ட வகுப்பிலும் P osl graduate) உள்ளது. முதலாண்டு தேர்ச்சி பெறாத (வரை இரண்டாம் ஆண்டு. படிக்க அனுமதித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/95&oldid=782666" இலிருந்து மீள்விக்கப்பட்டது