பக்கம்:நாடு நலம் பெற.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாடு நலம் பெற கின்றனர். உண்மையாகவே தேர்வினைத் தேர்வாகவே மதித்து நடத்தும் பள்ளிகள் - சிறக்கப் பயிற்றுவிக்கின்ற பள்ளிகள்- இத்தகைய மாற்றுவித்தைகள் செய்யாமை யால் சற்றே பின் அடைகின்றன. இவற்றை அரசாங்கமும் பல்கலைக் கழகங்களும் எண்ணிப்பார்க்க வேண்டும். (சில பள்ளி-கல்லூரிகள் முன்னாள் மாலையிலேயே வினாத் தாள்களைப் பிரித்து விளக்கம் சொல்வது உண்டாம்.அது அறிந்த மாணவர் மற்றப்பள்ளி- கல்லூரி மாணவர் களுக்குச் சொல்ல, அத்தாள் வெளியானது தெரிந்து மறுமுறை தேர்வ் நடத்தும் நிலையினையும் ஒரு சில ஆண்டுகளாகக் காண்கின்றோம்.) எனவே அனைவரும். இது பற்றிச் சிந்திக்கவேண்டும். மாணவர் பள்ளி, கல்லூரி களில் பெறுகின்ற தேர்வு மதிப்பெண், வகுப்பு நிலை முதலியனவே அவர்தம் வாழ்வை அறுதியிடுவன வாதலால் இதில் தவறு நடவாது பார்த்துக் கொள்ளுதல் அரசின் கடமையாகும். இல்லையேல் நல்லார்-வல்லார்வாட, அல்லார் அலுவலகங்களிலும் பிற உயர் இடங் களிலும் இருக்கப்பெற வாய்ப்பு உண்டாகி, நாடு நலிவுறும் நிலைக்கே செல்லும் என்பதை அனைவரும் உணரின் நன்று. உணர்ந்து செய்வார்கள் என்ற முழு நம்பிக்கையோடு நான் மேலே செல்லுகிறேன். இடையில் மத்திய பள்ளிகள் தேர்வு பற்றி ஒரு குறிப்பு. மத்திய பள்ளிகளில் இத்தேர்வு ஒரு வகையில் நடை பெற்றது. அதே பள்ளியில் மாணவர் தேர்வு எழுதினா லும் வேற்றுப்பள்ளியின் முதல்வர் தலைமை மேற்பார்வை யாளராக அமைந்து, தேர்வினைக் கவனிப்பார். அவர் வந்த பிறகே வினாத்தாள்கள் - தேர்வுக்கு 30 நிமிடங் களுக்கு முன்னரே பிரித்து, எடுத்து, உரிய வகுப்புகளுக்கு அனுப்பப்பெறும். பின், தேர்வுத்தாள்களை முன் கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்புவதால், தலைமைத் தேர்வாளர் துணையுடனோ அன்றி வேறு வகையிலோ முன்னாள் மாலையே பிரித்து மாணவர்களுக்கு விடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/94&oldid=782664" இலிருந்து மீள்விக்கப்பட்டது