பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

roo நாடோடி இலக்கியம்

தெல்லாம் தப்பென்று சொல்லிக் கன்னத்திலே போட்டுக் கொள். . . . என்ன? நான் சொல்கிறது காதில் விழு கிறதா?” -

'ஹஅம்! அவள் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். -

சொன்னபடி கேட்கமாட்டாளாம்! வாழாவெட்டி யாக இருக்கலாமென்று எண்ணமோ? பெட்டைச் சிறுக்கிக்கு இவ்வளவு ஆணவமா? இந்த வீட்டிலே கொட்டிக் கிடக்கிறதா? அரிசிச்சோறு இங்கே மட்டும் மூன்று வேளையும் கிடைக்கு மாக்கும்!”

தாயின் முகத்தை மகள் பார்த்தாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாயோ ஆவேசம் வந்தவளைப் போலப் பேசிக்கொண் டிருந்தாள். w 'அட பேயே! தாய் என்று வரும் குழந்தையின் உள்ளுணர்ச்சியை அறிந்துகொள்ள உனக்கு அறிவு இல்லையா? நீ பெண் அல்லவா? பருவ உணர்ச்சிகளை நீ ஒரு காலத்தில் பெற்றிருக்கவில்லையா? அது உனக்கு மறந்துபோய் விட்டதா? - இப்படிச் சொல் விக் கேட்பவர் யார்? .

மகளுக்கு ஆத்திரம் மூண்டுவிட்டது: "நீ கல்யாணம் பண்ணிக்கொடுத்த லெச்சணமோ, ஒண்ணுே ' என்று சொல்லிவிட்டு, : , ; . . . . . . . . . .

“கரைச்ச கிழவன் கிட்டே - நானிருந்து வாழ் மாட்டேன்’ என்று தன் சக்தியெல்லாம் திரட்டிக் கதறுகிருள்: அவன் அவளுக்கு நரை ச்ச கிழவன். அரிசிக்காரனே, அகமுடையானே, புருஷனே யாராளுலும் அக்கறை இல்லை. அவளுக்கு வேண்டியவன் அல்ல; அவனுடைய பருவத்திற்கும் அவளுடைய பருவத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ... * .