பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாட்டேன்’ 89.

நான் சோளச் சோறு தின்னமாட்டேன்!'

தாய்க்கு மகன் கூறும் வார்த்தையின் உள்ளுறை. பொருள் தெரியவில்லை; தெரிந்துகொள்ளும் சிரமத்தை அவள் வைத்துக்கொள்ளவில்லை, உண்மையிலே அந்த அரிசிக்காரக் கிழவன் வீட்டில் சோளச் சோறு தான் சமைக் கிார்களென்று எண்ணிக்கொண்டாள். தன் மகள் சொல்லும் காரணம் பெரியதன்று என்பதே அவள் அபிப்பிராயம். -

"அப்படியால்ை உன் புருஷ னிடம் சொல்லி அரிசி வாங்கிச் சோறு ஆக்கித் தின்பதுதானே?' என்று கேட்டாள் தாய். - -

மகள் அதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா?

வெறும் சோற்றுக்கு வந்த சண்டையென்று உண்மை யாகவே தாய் நினைத்தாளென்பதை அவள் உணர்ந்தாள். அந்தக் கிழவன் தனக்குப் பிரியம் இல்லாத ஏவல்களை இடுகிருனென்று ச்ொல்லர்மா என்று யோசித்தாள்.

கிழவன் சொன்னபடி கேட்பதால்ை தனக்கு எவ்வளவோ கஷ்டங்களும் மனத் துயரமும் ஏற்படு: மென்று சொல்லிவைக்கலாம் என்று எண்ணிள்ை.

'சொன்னபடி கேட்க மாட்டேன்’’.

'இதென்னடி, அதிசயமாய் இருக்கிறது. புருஷன் சொன்னபடி கேட்காமல் இருக்கலாமோ? புருஷன் சொல்லைக் கெட்காதவளுக்குப் பூமியிலே சோறு கிடைக்குமோ? அவன் சொன்னபடி கேட்காமல் வேறு யார் சொல்வதைக் கேட்கப் போகிருய்? உன் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப் போயிற்று? நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு அவனை உனக்குக் கல்யாணம் பண்ணி வைத்தேன். நமக்கெல்லாம் கிடைக்கக் கூடியவுளு அவன்? உனக்கு ஏன் இந்தக் கெட்ட புத்தி வந்தது? பேசாமல் வீட்டுக்குப்ப்ோ. அவன் காலில் விழு. நான் சொன்ன