பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நாடோடி இலக்கியம்

யங்களிலும் ஆங்கில மொழிகள் இடம்பெருமல் போக வில்லை. நாடோடிப் பாடல்களே மாத்திரம் இப்போது பார்க்கலாம்.

பெரியமுத்தம்மா, சின்னமுத்தம்மா என்ற இரண்டு பேரைப்பற்றி ஒரு பாட்டு. பெரியமுத்தம்மா கோபம் இல்லாமல் எதற்கும் சரியென்று சொல்லிவிடுகிறவள். சின்னமுத்தம்மாவோ கோபக்காரி. இதைத்தான் பின் வரும் கண்ணி சொல்கிறது.

ஆல்ரெடி திருநெல்வேலி,பெரிய முத்தம்மா! அதிலே கொஞ்சங் கோபக்காரி சின்ன முத்தம்மா!

இதில் ஆரம்பத்திலேயே ஆங்கில வார்த்தையாகிய ஆல்ரெடி' (Already) புகுந்துகொண் டிருக்கிறது. -

米 米 米, ::

ஒரு வெள்ளேக்காரனிடம் இந்து தேசத்து ஹரிஜன் பட்லராக இருந்தான். அவனுக்கு இன்னும் நன்ருக இங்கிலீஷ் பாஷை வரவில்லை. வந்த புதிதில் சில) வார்த்தைகளைக் கற்றுக்கொண்டான். ஒரு நாள் ஒரு பூனே வந்து துரைக்கு வைத்திருந்த பாலைக் குடித்துப் போய்விட்டது. பட்லருக்குப் பூனைக்கு இங்கிலீஷில் பேர் தெரியவில்லை. அவன் துரைக்கு அபிநய சாமர்த்தியத் துடன் விஷயத்தை விளக்குகிருன். . . . .

நாலு கால் 'ஸார்! ஒரு வால் ஸ்ார்!

மியாவ் மியாவ் ஸ்ார்! : மில்க் ட்ரிங்க் ஸார்! ஓடிப்போச்சு ஸார்! — (Sir, Milk, Drink).

பட்லர் இங்கிலீஷ் என்ற வேடிக்கைப் பாஷையைப் பற்றி யாவரும் அறிவார்கள்.

勞 軌 暈