பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 நாடோடி இல்க்கியம்

இங்கிலீஷ் வார்த்தைகளை விரவுவித்து வெறும் ஒசை மாத்திரம் அமையும்படி உள்ள பாடல்கள் சில உண்டு. .

ஒண்ணரி டுவரி டிக்கரி டன் ஆபன் காபன் இங்லீஷ் மென் ஆ இஸ் குளோப் (One-nery Two-ery Dickery Ton Often Coffen English-men Ah Is Globe)

  • 萎 馨

ஒரு விளையாட்டு. கிராமங்களில் குழந்தைகள் தங்கள் இரண்டு கைவிரல்களையும் கோத்துக்கொண்டு) வலதுகைப் பாம்பு விரலை மாத்திரம் மடக்காமல் கையை மூடிக்கொள்வார்கள். ஒரு குழந்தையை, 'என் கையைத் திற' என்று கையை மூடிக்கொண்ட ஒரு குழந்தை கேட்கும். கையைத் திறந்தவுடன், உள்ளே இருக்கும் பாம்புவிரலை அசைத்துக்கொண்டே உங்காம் படையான் வந்துட்டான்: உங்காம்படையான் வந்து ட் டான்!” என்று பரிகாசம் பண்ணுவது வழக்கம்:

இதே அபிநயம் வேறுவித அர்த்தத் தோடு இங்கிலீஷ் வார்த்தைகளே அடங்கிய நாடோடிப் பாடலாக வழங்கு கிறது. பாட்டு முழுவதும் இங்கிலீஷாக இருந்தாலும் பாட்டின் போக்கு தமிழ்க் குழந்தைகளுக்கு வேடிக்கை யாக அமைந்திருக்கிறது. -

ஒரு குழந்தை அழுதுகொண் டிருக்கிறது. அதன் தகப்பனர், 'ஏன் அப்பா அழுகிருய்?' என்று கேட் கிரு.ர். - . . . . . . . . . . . -

'அம்மா அடித்து விட்டாள்' என்று. குழந்தை

- சிணுங்குகிறது.