பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முத்து வீராயி காதல்

மோகனசுந்தரி, வசந்தவல்லி, பத்மாவதி, காந்தருவதத்தை என்ற பெயர்களைக் கேட்கும் போதே நமக்கு நாவலும், காவியமும் நினைவுக்கு வருகின்றன. காதல் நிகழ்ச்சிகளும், சிங்கார ரசமும் நிரம்பிய கதையின் நாயகிகளாகத்தக்க கெளரவம் அந்த ப் பெயருடைய நாரிமணிகளுக்குத்தான் இருக்கிறதென்று நிச்சயம் செய்துவிட்டோம். கதை எழுதப் புகுந்தால் பாக்கியல-மியோ, பங்கஜலக்ஷ்மியோ காதல் புரிய. வருகிமுள்; வெறும் லக்ஷ்மியையாவது அழைத்து வந்து நிறுத்துகிருேம். ஆனல், ராமாயி, கறுப்பாயி, வீராயி ன்ற பெயர்களைச் சொல்லும்போதோ காதல் கீதல் ஒன்றும் ஞாபகத்துக்கு வருகிறதில்லை. சுண்ணும்பு குத்துவதும், வீடு மெழுகுகிறதும், பாத்திரம் விளக்குகிற துமே இந்த ஆயி'களின் தொழில்கள் என்று வைத்து விட்டோம்.

நாடோடிப் பாவலன் அப்படி நினைக்கவில்லை. விாாயியின் வீரத்தைத்தான் அவன் பாடுகிருன், முத்து விராயியின் காதலை அவன் வருணிக்கிருன். ராமாயியின் துக்கத்தைச் சொல்லுகிருன் செல்லாயி, ம்ருதாயி, கறுப்பாயி முதலிய பெண்களைக் கதாபாத்திரங்களாக வைத்துப் பாடுகிருன்.

முத்துவீராயி என்ருல் காதல் புரியத் தெரியாத்ா?. அவளுக்கு அழகில்லையா ? பெண்மை இல்லையா? இன்பம் இல்லையா? அவளை நாயகியாக வைத்துப் பாடுகிற பாட்டிலே சுவை இல்லையா?-நிரம்ப இருக்கிறது.

疊 , 棠 ቈኞ 중