பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து வீராயி காதல் 105.

தென்னமரத் தோப்பாகிய நிலைக்களத்திலே முத்து வீராயியின் காதல் நாடகம் நிகழ்கிறது. தென்னமரச் சூழலிலே மரங்களெல்லாம் பா ளை விரித்துப் பருவ அணங்குகளைப்போல நிற்கின்றன. பாளை மணம் கமழுகின்ற அந்த இடத்திலே முத்து வீராயியின் காதலன் அவளைக் காண்கிருன்; கண்டு காதல் கொள்கிருன். தென்னமரத் தோப்பு முழு வதும் நறுமணம் கமழ்கிறது. தென்றல் வீசுகிறது. விரிந்து மணக்கும் பாளைக்குள்ளே இரண்டு தேரைகள் இருப்பதைக் காதலன் பார்க்கிருன். பாளைக்குள்ளே நடக்கிறது. காதல் விளையாட்டு என்று எண்ணி மயங்கு. கிமு ன்; முத்து வீராயியைப் பார்த்துச் சொல்கிருன்:

தென்ன மரத்துப் பாளைக்குள் ளேரெண்டு

தேரை இருந்து முழிக்குது பார் தென்ன லடிக்குது என்னை மயக்குது

தேன்மொழி யேமுத்து வீராயி ! - அவன் மயங்கிப்போய் முத்து விராயியின் தேன் மொழியை எதிர்பார்க் கிருன். - -

ഷ1്കേ பாக்கு மரத்தின் *t in களக்குள்ளே ரெண்டு பட்சி யிருந்து முழிக்குது. அதையும் தன் காதலிக்குக்காட்டுகிறன். | . .

பாக்கு மரத்துப் பாளைக்குள் ளேரெண்டு பட்சி யிருந்து முழிக்குது பார் பட்சி பறக்குது பாக்குத் துவக்குவது

பைங்கிளி யேமுத்து வீராயி ! அவன் அவளுக்காகக் காத்திருந்தானும்: அவளைச் சந்திக்க வேண்டுமென்று வீதியில் அவள் வீட்டுக்கு எதிரில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக்கொண்