பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ங்ாடோடி இலக்கியம்

டிருந்தான். ஆ வ ள் கண்ணிலே படுவாளென்று எண்ணிஞன். ஆனல், அவள் என்ன காரணத்தாலோ தலையைக் காட்டவில்லை. எத்தனை விதமாக அவன் ஏங்கி ஏங்கித் தவித்தான்! எவ்வளவு நொந்து போளுன்!

வாடாத பூவே மருக்கொழுந் தேயுன்னை வாசலி லேவரக் காணேனடி !

தேடாத நாளிலே தேடித்தேடி கொங்தேன்

தேன்மொழி யேமுத்து விராயி !

"வாடாத பூவே, மருக்கொழுந்தே !' என்ற வார்த்தைகளில் அவன் எவ்வளவு ஆசையைக் கொட்டி விடுகிருன்!

இப்படி அவளுக்காக அவன் ஏங்கி வாடிப்போன காலங்களில் அவன் தன் சுகத்தைக் கவனித்தாளு? எண்ணெய் தேய்த்து முழுகிளுளு? சோறே சரியாகச் சாப்பிடுவதில்லையே! அவன் தலைமயிர் சடைவிழுந்து போயிற்று. முத்து வீராயியைப் பெறுவதற்கு அவன் தவக்கோலம் பூண்டுவிட்டானே? . -

ஒரு வருசமாய் ஒண்ணரை மாசமாய்,

எண்ணெயுங் தேய்த்து முழுகாமல் சடை வளர்த்ததும் சன்னசி யானதும் சம்மத மோமுத்து வீராயி ! . இரண்டு உடலும் ஒருயிருமாகக் காதலர்கள் பழகு வார்கள். ஒருவருடைய வாழ்க்கைக்கு மற்ருெருவர். இன்றியமையாதவர். ஒருவரால். மற்முெருவருடைய அழகு பயன் பெறுகிறது; இன்பம் உண்டாகிறது. இந்தத் தத்துவங்களை யெல்லாம் பிரமாதமான வர்ணனை டகளாலே விளக்குவதற்கு அவன் படிக்கவில்லை. தன். குடுமியிலே சுற்றிக்கொள்கிற முல்லைப்பூவை ரசிக்கத் தெரியும்; அவளுடைய முகத்திலே அழகு பெறும் மூக்குத்