பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுக்காரன் பாட்டு i 17

முர்கள். இரண்டு கட்சியாகப் பிரித்துக்கொண்டு அ களைத் தம்முள் மாற்றிப் பாடுவார்கள். :

படகுப் பாட்டாக இருந்தாலும் விஷயம் படகு சம்பந்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. கப்பல் பாட்டு, ஒடப்பாட்டு என்று சில மெட்டுக்களே உண்டாகிவிட்டன.

அவற்றிற்கும் கப்பலுக்கும் சம்பந்தமே இல்லை. தொடர்ச்சியாகச் சில விஷயங்களை ஒருங்கே சொல்ல வேண்டுமென்ருல், முடுகி வரும்படி சேர்த்து அமைத்துக் கப்பல் பாட்டு ஆக்கி விடுவார்கள். இராமாயண ஒடம், பாரத ஒடம், நவராத்திரி ஒடம் முதலிய ஒடப் பாட்டுக்கள் இப்படி அமைந்தவையே. -

சில ராகங்களின் பேர்களை அடுக்கிச் சொல்லும் கப்பல் பாட்டு ஒன்று வருமாறு :

ஏலேலோ ஏலலில்லோ

தகுந்தத்தையா ஏலலில்லோ நாகரிக மானதொரு நாட்டையலங் காரம்

நயமெத்த காம்போதி கனமெத்த தேசி கன்னடா காபிநான் என்னடா சொல்வேன் சபையலங் காரமுள்ள சாவேரி ராகம் சாதகமுள்ளசெளராஷ்டிர முகாரி ... } எல்லாம் புகழுமெத்த கல்யாணி ராகம் இடிமுழங்கு ரவதேசி (!) தேசிக தோடி

இன்னும் சில ராகங்களை அபுருபமா ஏற்றிப் பின்னலே வருகுதையா சொன்னதொரு கப்பல்!

நெய்பவர்கள் தறி போடும்பொழுது ஒருங்கு சேர்ந்து பாடும் தறிப்பாட்டு ஒன்றில் ஆன்ட் நெய்யும்போது ஆரம்பம் முதல் கடைசி வரையில் செய்யப்படும் காரியங் >