பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 | 8 நாடோடி இலக்கியம்)

களெல்லாம் தொடர்ச்சியாக வருகின்றன. அந்தப் irr i (9, கப்பல் பாட்டு மெட்டாக இருக்கிறது. ஏலேலோ - மயில் - வேலோனே' என்று ஒவ்வொரு சந்தையும் முடிகிறது. அதன் முதற் பகுதி வருமாறு:

கொட்டிக்கோ வடக்கு முகமாகவே நின்று

குனிந்துமண் மீதில் மனமுமொன் ருக வெட்டியா னப்பிடித்து மேல்சேரத் தூக்கி

மேலுக் கெதிராகத் தாழவே போடு கட்டியாகப் போகுது வெட்டியும் பாரு

காலரம் பானவன் மேல்விழப் போருன் முட்டிக் காலு முழங்குடித்துத் தூக்கி

மூச்சை பிடித்தொரு பாய்ச்சலாத் தூக்கு கொட்டாரம் பண்ணுதே கெட்டியாத் தூக்கு

ஒசந்தா அரைமட்டம் நிறைந்ததா பாரு சட்டமா நீர்சொன்ன படியுமே ஆச்சு

தண்ணீர் மொண்டுவரச் சென்றதே கப்பல்! ஏலேலோ - மயில் - வேலோனே ! - மாப்பிள்ளையை ஏசும் ஒடப் பாட்டு ஒன்று:

ஏலேலோ-தத்தையா - ஏலலில்லோ ஏலேலோ - ஏலலில்லோ

தேசாதி தேசமெங்கும் - தாய்தந்தை தேடிவந்து மாப்பிள்ளையை -

மோசமாக அழைத்துவந்து - வெகுபரிந்து மிகவாக வார்த்தை சொல்லி

(முடுகு)

அத்தானே அத்தானே

அத்தானே கேளும்