பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4 நாடோடி இலக்கியம்

கொடுத்துக் கேட்கப் பழகின நமக்கு இந்தப் பாட்டிலே நாட்டம் செல்வதில்லை.

வயல் வெளியிலே ஏற்றத்தால் தண்ணிர் இறைக் கிருர்களே, அங்கே நடைபெறும் இயற்கைச் சங்கீதக் கச்சேரியைக் கேட்க விருப்பமுள்ளவர்கள் போய்க் கேளுங்கள். ஏற்றத்தில் ஏறி மிதிப்பவன் ஒருவன்; கீழே சால் பிடிப்பவன் ஒருவன். இந்த இரண்டு பேர்களே அந்தக் கச்சேரியை ந ட த் து கி ரு ர் க ள். ஏற்றமும் சாலுமே பக்கவாத்தியங்கள். முக்கியமான சங்கீத வித்துவான் சால்பிடிப்பவன். அவன் பாடும் பாட்டிலே இசை பொங்குகிறது. கருத்து உள்ளடங்கி இருக்கிறது. இரண்டையுமே உணர்ந்து இன்புறுபவர்கள் உலகத்தில் சிலரே. வான விதானத்தின் கீழே பச்சைப் பயிரின் அழகு படர்ந்த பரப்பில், ஏற்ற நீர் ஒடும் சல சலப்பு ஒலியானது சுருதிபோட, சாலை முகக்கும் போதும் மேலே கவிழ்க்கும்போதும் தாளம் பிறக்கப் பாடும் அந்த ஏற்றக்காரர்களுடைய சங்கிதம், ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் ஒர் இடத்திற்குள் சிறைப்படவில்லை. அவர்கள் உள்ளம் விரிந்து உவகை யொங்கும்போது வேலையிலே முனைகிருர்கள். அவர்கள் தம் உடல் முழுதும் வளைந்து வேலைசெய்யும்போது அதல்ை உண்டாகும் தேகசிரமத்தை அந்த இனிய பாட்டு மறக்கச் செய்கிறது. அவர்களுடைய உழைப்பில் சங்கீதம் இன்பத்தைப் புகுத்துகிறது. தம்மை மறந்து உழைக்கும் அவர்களுக்கு அந்த இசையே நிழலாகவும் சோருகவும் இருந்து சிரம பரிகாரத்தை உண்டாக்குகிறது. சங்கீதம், பாடுபவனுக்கும் கேட்ப வனுக்கும் ஒருங்கே இன்பமூட்டுகிறதென்ற தத்துவத்தை அவர்களிடம் நாம் தெளிவாகக் காணலாம். ஏற்றப் பாட்டு ஒன்றுதான: நெல் இடிக்கும் பெண்கள், காரை குத்தும் மங்கையர் முதலிய மெல்லியலார் கூட்டத்திலே பிறக்கும் நயமான இசையைக் கேட்டுப் பாருங்கள். கும்.மியடிக்கும்போது அவர்கள் வளைக் கரங்கள் குலுங்கப்