பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் பாட்டு 3

- ஒலத் திடையே

உதிக்கும் இசையினிலும் ......நெஞ்சைப்

பறிகொடுத்தேன் urlມສ່.”

- -குயிற்பாட்டு,

மிகவும் கூர்மையான காது படைத்தவர்களைத் தமிழில், எஃகுச் செவி படைத்தவர்கள்’ என்று சொல்லுவார்கள். பாரதியாரும் அவரோடு சேர்ந்த கவிஞர் கூட்டத்தினரும் எஃகுச் செவி படைத்தவர்கள்: முதல் தரமான காதுகளே உடையவர்கள். நாமோ மரச்செவி படைத்தவர்கள்: . மூன்ருந்தரமான காது களைப் பெற்றவர்கள்.

இரண்டாந் தரமென்று நடுவிலே ஒன்று இருக் கிறது. இயற்கைச் சங்கீதம் இயற்கைத் தேவியின் நடனத்திலே, ஒய்யாரச் சிரிப்பிலே. உல்லாச நடையிலே உண்டாவது. மனித லோகத்திலே வேறு ஒரு வகை இயற்கைச் சங்கீதம் உண்டு. அதில் இயற்கையின் மணம் அதிகமாகவும் செயற்கையின் மண்ம் கொஞ்சமாகவும் இருக்கின்றன. முன்னே சொன்ன இசையிலே பாட்டு இல்லை; வெறும் இசைதான் இருக்கிறது. இப்பொழுது சொல்லும் சங்கீதத்தில்ே பாட்டும் இருக்கிறது. பாட் டென்ருல் கவிதையும் கூட வருவதுதானே? இந்தச் சங்கீதத்தைக் கேட்பதற்குக் கூட, நாகரிகம் படைத்த" நமக்குக் காதுகள் இல்லை.

இந்தப் பாட்டிலே ஓசை இனிமையும் கருத்தழகும் மலிந்து கிடப்பதை நாம் உணர்வதில்லை. சங்கீதக் கச்சேரி என்று பேர் வைத்துக்கொண்டு அத்ற்கு ஒர் இடமும் பக்க வாத்தியங்களும் காலமும் நிர்ணயித்துப் பாடுகிற செயற்கை யிசையிலே ம யங் கிக் காசு