பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 குருவியின் கல்யாணம்

குழந்தைகளின் கண்களிலும் கற்பனையிலும் அடிக் கடி தோன்றும் இனிய பறவை குருவி. அவர்களுக்குக் கதை கூறும் பாட்டி குருவியைக் கதாநாயகனக வைத்து எவ்வளவோ கதைகளைக் கூறுகிருள். விடுகதைகளில் குருவி பல வகையில் வருகிறது. பாட்டுக்களிலோ கணக்கு வழக்கே இல்லை. பாரதியார்கட, "பாப்பா பாட்' டில்,

சின்னஞ் சிறுகுருவி போலே-ே

திரிந்து பறந்துவா பாப்பா

என்று சொல்லுகிரு.ர். குழந்தையினுடைய தோழர் களுக்குள் குருவி முக்கியமானது. இதை உலகத்துக் குழந்தைப் பாட்டுக்களிலும் கதைகளிலும் காணலாம்.

நாடோடிப் பாட்ல்களில் சின்னஞ்சிறு குருவி பல பல விதமாகக் காட்சி அளிக்கிறது. பல இடங்களில் உவமைப் பொருளாக வருகிறது.

வேடன் விரித்த வலையிலே ஒரு சிட்டுக் குருவி - பெட்டை- வந்து அகப்பட்டுக்கொண்டது. தொடர்ந்து ஆண் குருவி ஒன்றும் வந்து சிக்கியது.

வலையிலே மாட்டிக்கொண்டாலும் ஆணும் பெண்ணு மாக இருப்பதிலே ஒர் ஆ று த ல் உண்டாயிற்றுப் போலும் !

வலை மிகவும் பெரியது. சின்னஞ் சிறு சிட்டுக் குருவிக்காக மட்டும் அமைத்ததல்ல; பறவைப்