பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வாடிய உள்ளம்

தி மிழ் இலக்கியத்திலே காதலைப்பற்றிச் சொல்லும் பகுதிக்கு அகப்பொருள் என்று பெயர் வைத்திருக்கிருர் கள். அந்த அகப்பொருள் தமிழுக்கே சிறப்பானது என்றும் பழங்காலத்தில் அகத்துறை அமைந்த பாடல் களைப் புலவர்கள் மிகவும் ஊக்கத்தோடு பாடினர்க ளென்றும் புலவர்கள் சொல்லிக்கொள்வார்கள்.

காதல் என்பது ஆண் பெண் என்ற பகுப்புடைய உயிர்கள் எல்லாவற்றிற்கும் உரியது. மனித சாதிக்கு அது சிறப்பாக உரியது. காதலை வாழ்க்கையில் உயர்ந்த இன்பமாகவும் மிகவும் மேன்மையான உணர்ச்சியாகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்பது லட்சியவாதி களின் கொள்கை. கவிஞர்களுக்கோ காதல் தெய்வத் துக்குச் சமானமானது. காதலைப் பாடாத கவியே உலகத்தில் இல்லை என்று சொல்லிவிடலாம். எந்த எந்த மொழியிலே கவிதை இருக்கிறதோ அந்த அத்தப் மொழி இலக்கியத்திலே காதலும் நிரம்ப இருக்கும்.

எல்லா மொழிகளுக்கும் பொதுவான காதலைத் தமிழர்கள் மாத்திரம் தங்களுக்கே உரியதென்று சொல் விக்கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்?' என்ற கேள்வி எழுவது நியாயந்தான். காதல் தமிழர்களுக்கே உரிய சிறப்பு உணர்ச்சியல்ல. காதற் கவிதைகளும் தமிழ் மொழிக்கே தனியுரிமைப் பொருளல்ல. ஆளுல் தமிழர் கள் மற்றவர்கள் செய்யாத ஒரு காரியத்தைச் செய்திருக்கி ருர்கள். காதல் வாழ்க்கையை ஒரு நாடகத்தைப் போல. விரித்து ஒன்றன்பின் ஒன்ருக உணர்ச்சி வகைகளையும் நிகழ்ச்சிகளையும் தனித்தனித் துறையாக வகுத்து இலக்